அம்பாறையில் தந்தை ஒருவரின் கொடூர செயல்!

35

அம்பாறை மாவட்ட பெரிய நீலாவணை பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது மாற்றுத்திறனாளிகளான ஆண் பெண் ஆகிய இரு பிள்ளைகளின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு அவரும் தனது கழுத்தை வெட்டி தற்கொலை செய்து கொண்டு முயற்சித்த நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (14) பகல் 11.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பெரிய நீலாவணை பொலிசார் தெரிவித்தனர்.

பெரிய நீலாவனை பாக்கியதுஸ் சாலிஹாத் வீதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளான 29 வயதுடைய முகமது கலீல் முகமது றிகாஸ். 15 வயதுடைய முகமது கலீல் பாத்திமா பஸ்மீயா என்;ற இருவருமே பரிதாபகரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான முகமது மீராசா முகமது கலீலின் இரு ஆண்பிள்ளைகள் திருமணம் முடித்து வெளிநாடு சென்றுள்ள நிலையில் கொலை செய்யப்பட்ட மகனும் மகளும் மாற்றுத்திறனாளிகளாக இருந்து வந்துள்ள நிலையில் மனைவி கடந்த ஒருவருடத்துக்கு முன்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் இரு மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகளை இவர் பராமரித்துவந்துள்ள நிலையில் அவருக்கு ஏற்பட்ட மனவிரத்தியின் காரணமாக சம்பவதினமான இன்று பகல் 11.30 மணிக்கு தனது 29 வயதுடைய மகனையும் 15 வயதுடைய மகளின் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தானும் கழுத்தை கத்தியால் வெட்டி தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் அவரை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இச் சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திற்கு நீதவான் சென்று விசாரணையின் பின்னர் சடலத்தை பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரிய நீலாவணை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.