அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஓருவர் பலி

131

கனேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு வீடு ஒன்று சோதனையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பதிலடித் தாக்குதல்களில் சந்தேக நபர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, துப்பாக்கிகள் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Get real time updates directly on you device, subscribe now.

Comments are closed.