Browsing: இலங்கை

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய நடனம், இசை, நாடகம் மற்றும் நாடகம் மற்றும் வீட்டுப் பொருளாதாரப் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நடனம் மற்றும் இசை பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. நாடகம் மற்றும் நாடகக் கலைகள் மற்றும் வீட்டுப் பொருளாதாரம் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகள் இம்மாதம் 27ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி […]

ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வெல்லவாய – மல்வத்தாவல பகுதில் உள்ள பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர். அப்பாடசாலையில் பயிலும் 18 மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர். இதனையடுத்து சுயீனமடைந்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில் […]

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நேற்று (13) இரவு வேலைக்காக வந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டல் நீர்கொழும்பில் திறக்கப்படவுள்ளது. மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின் பொலகல பகுதியில் “அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro Floating Resort )” திறக்கப்படவுள்ளது. 13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த (eco friendly) 31 கபனாக்களை உள்ளடக்கியதாக திறக்கப்படும் இக் ஹோட்டல் இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டலாகும்.

ஆலய பிணக்கு ஒன்றினை அடுத்து, வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தம் (தம்பா) நீராகாரம் ஏதுமின்றி கடந்த திங்கட்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்  அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தமிழ் சைவ பேரவையினரால் வழங்கபட்ட வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரதம் இன்று காலை  நிறைவு செய்யப்பட்டுள்ளது.   சுழிபுரம் மத்தி கறுத்தனாந்தோட்டம்  துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைத் தீர்த்து பொதுக்கூட்டத்தினை நடாத்தாமாறு வலியுறுத்தி […]

திருகோணமலை – கிண்ணியா, மகாவலி ஆற்று பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிப்பதற்காக இவர்கள் பயன்படுத்திய படகு மகாவலி ஆற்று பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரிய ஹெரோயின் கடத்தல்காரர் என பொலிஸாரால் அறியப்படும் ஷிரான் பாஷிக்குடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பெண் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த வேளையில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ​கைது செய்யப்பட்ட பெண் குறித்த கடத்தல்காரருடன் கள்ள உறவில் ஈடுபட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கஸ்பேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்கஸ்ஓவிட்ட பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை சுற்றிவளைத்த பின்னர் 480 மில்லி கிராம் ஹெரோயினும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தெஹிவளை […]

நயினாதீவில் நேற்று காலை 20 கிலோ மற்றும் 140 கிராம்கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது நயினாதீவு  கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோகிராம் மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றினர். இதனையடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு குமுழமுனை தண்ணிமுறிப்பு காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (14.02.2024) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது. தண்ணிமுறிப்பு குளத்தினை அண்மித்த காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்ற குடும்பஸ்தரான ஆறுமுகத்தான் குளத்தினை 48 அகவையுடைய சேர்ந்த துரைராசா ஆனந்தராசா என்பவரே துப்பாக்கி வெடித்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வேட்டைக்கு சென்ற குறித்த நபர் காட்டிற்குள் சட்டவிரோத துப்பாக்கி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் அவருடன் வேட்டைக்கு சென்றவர்களால் எடுத்துவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். […]

கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தரகர்கள் ஊடாக அதிக போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 160,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை மற்றுமொரு நபருக்கு வழங்கிய போதே வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த இந்த வைத்தியர், வைத்தியசாலை சேவைக்கு மேலதிகமாக பல பிரதேசங்களில் வைத்திய நிலையங்களை நடத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைத்தியர் இரவு நேரத்தில் […]