Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: யாழ்
யாழ்ப்பாணம் – அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலையின் நிறுவுனர் அமரர் ஸ்ரீமான் வி.காசிப்பிள்ளையின் சிலை திறப்பு விழா இன்று இடம்பெற்றது. இன்று மதியம் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் வித்தியாசாலை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அமரர் வி.காசிப்பிள்ளையின் சிலை வவுணியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சு.மோகனதாஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த சிலையினை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த பரமேஸ்வரன் றசாந்தன் எனும் இளம் சிற்பி தத்துரூபமான முறையில் வடிவமைத்துள்ளார். வவுணியா பல்கலைக்கழக வேந்தரும், பாடசாலையின் பழைய மாணவர் சங்க […]
ஆலய பிணக்கு ஒன்றினை அடுத்து, வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தம் (தம்பா) நீராகாரம் ஏதுமின்றி கடந்த திங்கட்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தமிழ் சைவ பேரவையினரால் வழங்கபட்ட வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரதம் இன்று காலை நிறைவு செய்யப்பட்டுள்ளது. சுழிபுரம் மத்தி கறுத்தனாந்தோட்டம் துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைத் தீர்த்து பொதுக்கூட்டத்தினை நடாத்தாமாறு வலியுறுத்தி […]
நயினாதீவில் நேற்று காலை 20 கிலோ மற்றும் 140 கிராம்கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது நயினாதீவு கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட அதிரடிப் படையினர் 20 கிலோகிராம் மற்றும் 140 கிராம் கஞ்சாவினை கைப்பற்றினர். இதனையடுத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலுள்ள வீடொன்றில் பல பெறுமதியான பொருட்களை கவளவாடிய சந்தேக நபர், விரைந்து செயல்பட்ட பொலிஸாரினால் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டார். அச்சுவேலிப் பகுதியை சேர்ந்த 25 வயதான நபரே பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வெளிநாட்டில் இருந்து வந்த நபரொருவரின் வீட்டில் இருந்து மடிக்கணினி, கையடக்க தொலைபேசி, கடவுச்சீட்டு, வங்கி அட்டைகள், வங்கி புத்தகங்கள் என பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்ட நிலையில் நேற்று (13) […]
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலக பிரிவின் பிரதேச செயலாளர் மக்கள் சந்திப்பாக உரும்பிராய் தெற்கு கிராமத்தில் உள்ள செல்வபுரம் யோகபுரம் கிராமத்தை சேர்ந்த கிராம மட்ட அமைப்புக்கள், மக்கள் ஆகியோரை செல்வபுர உதயசூரியன் பொதுமண்டபத்தில் நேற்று 14.02.2024 சந்தித்தார். இதில் பிரதேச செயலாளர் சிவசிறி ஐயா, உதவி பிரதேச செயலாளர், நிர்வாக கிராம அலுவலர், விளையாட்டு அலுவலர், இளைஞர் கழக அலுவலர் சிறுவர் பிரிவு அலுவலர்கள், பிரதேச செயலக அலுவலர்கள், கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் மக்கள் […]
வலி நிறைந்த நினைவுகள் பாலா ஸ்ரோஸ் உரிமையாளர் பொன்னையா செல்வராசா நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தார். 2007 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 06 திகதி இரவு 8:30 மணியளவில் ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட இராணுவப்புலனாய்வு மற்றும் ஆயுத குழுவால் பொன்னையா செல்வராசா , சிவஞானம் செல்வதீபன் ஆகியோர் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் வெலிகந்தை காட்டுப்பகுதியில் ஆயுத முனையில் தடுத்து வைக்கப்பட்டனர் , யுத்தகாலத்தில் வர்த்தகர்களை குறிவைத்து ஆயுத குழு கப்பம் கோரி கடத்தல்களை […]
உலக காதலர் தினத்தினை முன்னிட்டு நாளை தினம் காதலர்கள் தமது காதல் பரிசினை கையளிப்பதற்காக காதல் பொருட்களை மிகவும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர் அந்தவகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் காதலர்கள் காதல் பரிசினை தத்தமது காதலர்கள்,காதலிகள் தமது அன்பு காதல் பரிசினை கையளிப்பதற்கு பொருட் கொள் வனவில் கையளிப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ்ப்பாண மாநகர உள்ளிட்ட கடைத் தொகுதி யிலும் இவ் வாறான பொருட்கள் கொள்வனவு செய்வதில் ஆர்வம் இன்று காட்டியுள்ளனர்.
போதைப் பொருளுக்கு எதிரான போராட்டம் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. “போதைப் பொருள் பெருந்தீமையிலிருந்து எம்மையும், எமது சந்ததியினரையும் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் யாழ் மாவட்ட சர்வமத பேரவை தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள், செயலாளர் அருட்பணி இ.ராஜ்குமார், யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர், மௌலவி வி.ஏ.எஸ்.சுபியான் உள்ளிட்ட சில […]
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது. 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த வருடம் 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.