Browsing: செய்திகள்

டிஜிட்டல் மார்கெட் துறையில் பணியாற்றும் ஸ்பானிஷ் இந்திய மொடலான ஷாரதா என்னும் பெண், திருமணப் பெண்போல் லெஹங்கா உடை அணிந்து லண்டன் மெட்ரோவில் நடந்து திரிகிறார். சாலையில் நடந்து செல்லும் அவரை அங்குள்ளவர்கள் பார்த்து திகைக்கின்றனர். ஒரு சிலர் அவரை புகைப்படமும் எடுத்துக் கொள்கின்றனர்.

பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதாக ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் பொதுநலவாய நிறுவன மற்றும் முதலீட்டுச் சபையுடன் (CWEIC) நடைபெற்ற வட்டமேசை கலந்துரையாடலின் போதே இவ்வாறு பிரித்தானிய நிறுவனங்களின் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கலந்துரையாடலில் பிரித்தானியாவின் 30 முன்னணி வணிகப் பிரமுகர்கள், மூலதனப் பிரதிநிதிகள், முதலீட்டு ஆலோசகர்கள், நிதி வல்லுநர்கள் மற்றும் ஏற்கனவே இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டுள்ள வர்த்தகர்கள் எனப் […]

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டும் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகனின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து நீதிமன்ற உத்தரவுக்கமைய விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தன்னை முகாமிலிருந்து விடுவித்து, லண்டன் அனுப்ப வலியுறுத்தி கடந்த […]

காதலர் தினத்தில் சிறுவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் சிறுவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் பொறுப்பு என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் உதய குமார அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். காதலர் தினம் போன்ற விசேட தினங்களைக் கொண்டாடும் போது 16 வயதிற்கும் குறைந்த சிறுவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு, பாலியல் துன்புறுத்தல் உட்பட அனைத்து வகையான […]

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய நடனம், இசை, நாடகம் மற்றும் நாடகம் மற்றும் வீட்டுப் பொருளாதாரப் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நடனம் மற்றும் இசை பாடங்கள் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் இம்மாதம் 20ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. நாடகம் மற்றும் நாடகக் கலைகள் மற்றும் வீட்டுப் பொருளாதாரம் பாடங்களுக்கான நடைமுறைத் தேர்வுகள் இம்மாதம் 27ஆம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி […]

ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. வெல்லவாய – மல்வத்தாவல பகுதில் உள்ள பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர். அப்பாடசாலையில் பயிலும் 18 மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர். இதனையடுத்து சுயீனமடைந்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ள நிலையில் […]

பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நேற்று (13) இரவு வேலைக்காக வந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டல் நீர்கொழும்பில் திறக்கப்படவுள்ளது. மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின் பொலகல பகுதியில் “அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro Floating Resort )” திறக்கப்படவுள்ளது. 13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த (eco friendly) 31 கபனாக்களை உள்ளடக்கியதாக திறக்கப்படும் இக் ஹோட்டல் இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டலாகும்.

ஆலய பிணக்கு ஒன்றினை அடுத்து, வலி.மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வே.சச்சிதானந்தம் (தம்பா) நீராகாரம் ஏதுமின்றி கடந்த திங்கட்கிழமை காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்  அகில இலங்கை சைவ மகா சபை மற்றும் தமிழ் சைவ பேரவையினரால் வழங்கபட்ட வாக்குறுதிக்கு அமைவாக உண்ணாவிரதம் இன்று காலை  நிறைவு செய்யப்பட்டுள்ளது.   சுழிபுரம் மத்தி கறுத்தனாந்தோட்டம்  துர்க்கை அம்மன் ஆலயத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்டுள்ள பிணக்கினைத் தீர்த்து பொதுக்கூட்டத்தினை நடாத்தாமாறு வலியுறுத்தி […]

திருகோணமலை – கிண்ணியா, மகாவலி ஆற்று பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிப்பதற்காக இவர்கள் பயன்படுத்திய படகு மகாவலி ஆற்று பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.