28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கிழக்கில் தமிழர்கள் 15 ஆண்டுகளில் இடம்தெரியாமல் அழிந்துபோகும் ஆபத்து : நா.உ.எஸ்.கஜேந்திரன்

தமிழர்களுடைய தலை நகரமான திருகோணமலை இன்று தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் கபளீகரம் செய்யப்படு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டு மிகப் பெரிய பௌத்த மயமாக்கலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எனவே கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம்தெரியாது அழிந்து போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது ஆகவே இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்ட வேண்டுமாக இருந்தால் தமிழர் தேசம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும் என நா.உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

துமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பில் தேர்தல் புறக்கணிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நா.உறுப்பினர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்;களுடைய தலைநகரமாக இருக்ககூடிய திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள் முழுவதும் கபளீகரம் செய்யப்படு 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலே 32 விகாரைகள் அமைக்கப்பட்டுகின்றது.

இந்த செயற்பாடுகள் நடைபெறுகின்றபோது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவும் சிஜித் பிரேமதாஸ எதிர்கட்சி தலைவராகவும் அனுரா குமார திசநாயக்க வலிமையான ஒரு எதிரணியினுடைய கட்சி தலைவராகவும் பாராளுமன்றத்தில் இருந்து கொண்டிருக்கும் போது தான் இந்த பௌத்தமயமாக்கள் இடம்பெற்றுக் கொண்டி ருக்கின்றது.

அதேபோல மட்டக்களப்பு எல்லைபகுதியான மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரையில் 3 இலச்சம் மாடுகள் அழிவுக்கு உள்ளாக்கப்பட்டு 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு அபகரிப்பு தொடர்ந்து கொண்டிருக்கின்றது இவை எல்லாம் நடைபெறுகின்றபோது சஜித்தே, அனுரவே, ரணிலே இதனை தடுப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை

இன்று அம்பாறை மாவட்டம் முற்றாக பறிபோவிட்டது அதேபோல திருகோணமலை மாவட்டமும் கிட்டத்தட்ட மிகப் பெரியளவில் பறிபோய்விட்டது மட்டக்களப்பு மாவட்டம் பறிபோகத் தொடங்கிவிட்டது இந்த நிலையில் கிழக்குடன் வடக்கு இணைந்தால் மாத்திரம் தான் கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் வடக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இணையும்போது தங்களுடைய இருப்பை உறுதி செய்யக் கூடியதாக இருக்கும்

இந்த இணைவு நடை பெறவில்லை என்றால் கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற தமிழ் மக்கள் 15 ஆண்டுகளில் இருந்த இடம்தெரியாது அழிந்து போகக்கூடிய ஆபத்து இருக்கின்றது.

ஆகவே இவை எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்ட வேண்டுமாக இருந்தால் இந்த இனவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு தமிழர் தேசம் ஒன்று அங்கீகரிக்கப்பட்ட தீர்வு எட்டப்பட வேண்டும்.

எனவே அந்த நிலைக்கு சிங்கள பேரினவாதத்தை அடிபணியவைக்க வேண்டுமாக இருந்தால் இந்திய மற்றும் மேற்குநாடுகளை எங்கள் கோரிக்கை ஏற்றுக் கொள்ள வைக்கவேண்டுமாக இருந்தால் இந்த தேர்தலை புறக்கணிப்பதன் மூலமாகதான் இந்த நெருக்கடியை இவர்களுக்கு ஏற்படுத்த முடியும் எங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் இவர்கள் ஒரு போதும் எந்த நடவடிக்கையையும் எடுக்கப்போவதில்லை

நாங்கள் ஒற்றுமையை காட்டுகின்றோம் என்று நாங்கள் எங்களை ஏமாற்றிக்கொள்ளக் கூடாது நாங்கள் ஒற்றுமையாக இருந்து அவர்களுக்கு சவால் விடவேண்டும் எங்களுடைய வாக்கு தேவை என்று சொன்னால் நீ இதை செய் என்று நிற்பந்தத்தை உருவாக்க வேண்டும் அதற்காக இந்த தேர்தலிலே எல்லோரும் புறக்கணிக்க வேண்டும்.

இந்த உலகத்தோடு பேரம் பேசக்கூடிய முதுகெலும்பு இருக்க கூடிய தலைவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாத்திரம்தான் இருக்கின்றார் அவருடைய தலைமையிலான எங்களுடைய அரசியல் இயக்கத்தினால் மட்டும்தான் இந்த பேரினவாதத்திற்கு அடிபணியாமல் இந்த ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுக்க முடியும் எனவே அவ்வாறான ஒரு குரலை நீங்கள் பலப்படுத்த வேண்டும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.

Related posts

11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது

User1

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை…!

User1

இன்னும் பல ஆச்சரியங்கள் வெளிவரும் – அனுர.!

sumi

Leave a Comment