28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இரு சட்டமூலங்கள் சபாநாயகரால் சான்றுரைப்படுத்தப்பட்டுள்ளன !

வெளிநாட்டுத் தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல் பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இன்று கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த 03 ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 79 உறுப்புரைக்கு அமையவே சபாநாயகர் கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். அதன் 93 ஆம் அத்தியாயமான வெளிநாட்டுத் தீர்ப்புகளின் வலுவுறுத்துகைக் கட்டளைச்சட்டம் மற்றும் 94 ஆம் அத்தியாயமான தீர்ப்புகளின் பரஸ்பர வலுவுறுத்துகைக் கட்டளைச்சட்டத்தை நீக்குவதற்கும் அதனோடு தொடர்புபட்ட கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாகும்.

அதற்கமைய 2024ஆம் ஆண்டு 49 ஆம் இலக்க வெளிநாட்டுத் தீர்ப்புகளைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமாக அறியப்படும். அத்துடன் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் லக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தை நிறுத்துவதற்கான சட்டமாகும். அதற்கமைய இந்த சட்டமூலம் 2024ஆம் ஆண்டு 50 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமாக அறியப்படும்.

Related posts

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் புதிய அரசியல் கூட்டணி உதயம் !

User1

7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் பிடிபட்டன

sumi

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்காக காத்திருப்போருக்கு ரணிலின் விசேட செய்தி

User1

Leave a Comment