எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்திற்குள் கையடக்கத் தொலைபேசியை எடுத்துச் செல்ல அனுமதியில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம். ஏ எல் ரத்நாயக்க நேற்று வியாழக்கிழமை (12) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களின் வாக்குச் சீட்டுகளை புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், வாக்களிப்பு தினத்தன்று பிற்பகல் 4.00 மணிக்கு முன்னதாக அவற்றை வெளியிடுவதற்கும் விளம்பரப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தபால்மூல வாக்களிப்பின் போது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்த அனுமதித்ததன் மூலம் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் விடயங்கள் பாரதூரமானவை என தெரிவித்த ரத்நாயக்க , நாம் யாருக்கு வாக்களிக்க செல்கிறோம் என்பதை அறிவிப்பது சட்டவிரோதமானது எனவும் தெரிவித்துள்ளார்.