28.4 C
Jaffna
September 19, 2024
ராசி பலன்கள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்

இன்று இரவு 07.05 வரை நவமி. பின்னர் தசமி .

இன்று மாலை 06.31 வரை மூலம். பின்னர் பூராடம்.

கிருத்திகை ரோகினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.

சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் விரும்பிய வகையில் முன்னேற்றம் அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் பணப்பட்டுவாடாக்களை சுலபமாக நடத்துவீர்கள். வேலையிடங்களில் பாராட்டு பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் அதிக அக்கறை காட்டுவீர்கள். சந்திராஷ்டமம். நிதானம் தேவை.

ரிஷபம்

தொழிலில் தேவையில்லாத எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். தக்க உதவியின் மூலம் அதைத் தாண்டி வருவீர்கள். வேலைப் பளுவை விடா முயற்சியால் முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடாதீர்கள். பண உதவிகள் தாமதமாக கிடைக்கும். சந்திராஷ்டம காலம். கவனம் தேவை. ‌

மிதுனம்

மாமனார் வீட்டு மங்கல நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பீர்கள். வீடு புனரமைப்பு வேலைகளில் ஈடுபடுவீர்கள். வெளிநாட்டு பயணங்களுக்கு முன்னெடுப்பு செய்வீர்கள். தான தர்மங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். சிறு வியாபாரிகள் லாபம் அடைந்து மனநிறைவு கொள்வீர்கள். வேலையிடங்களில் பாராட்டு பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவால் உற்சாகம் அடைவீர்கள்.

கடகம்

வெளியிடங்களில் சாப்பிடுவதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மருந்து எடுத்துக் கொள்வீர்கள். உறவினர்களால் தொல்லைகளை சந்திப்பீர்கள். தடைகளைத் தாண்டி வெற்றிக்கோட்டை அடைய கடுமையாக உழைப்பீர்கள். காதலியின் வெறுப்பான பேச்சால் மன உளைச்சல் அடைவீர்கள். தடுமாறி விழுந்த தந்தையாரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்வீர்கள்.

சிம்மம்

எந்தக் காரியத்தை எடுத்தாலும் வெற்றி காண்பீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவீர்கள். பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வைகாசி மாதம் வாஸ்து செய்ய தயார் ஆவீர்கள். வங்கி லோனை எதிர்பார்த்தபடி பெறுவீர்கள். மனை இடங்கள் வாங்குவீர்கள். தன தான்ய விருத்தி அடைவீர்கள். வாகனங்களை மாற்றுவீர்கள்.

கன்னி

விரும்பிய வேலையில் சேர்வீர்கள். சம்பள உயர்வால் சந்தோஷம் அடைவீர்கள். விவசாய உற்பத்தியை பெருக்குவீர்கள். ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள். கணினித்துறையினர் கணிசமான லாபம் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். மனைவியின் ஒத்துழைப்பால் அக்கறையோடு வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள்.

துலாம்

சகோதர உறவுகளால் சந்தோசம் பெறுவீர்கள். தக்க சமயத்தில் அவர்களின் உதவியை அடைவீர்கள். முந்தி வரும் கோபத்தால் சொந்தக்காரர்களிடம் பிரிவை ஏற்படுத்துவீர்கள். தொழிலில் தைரியமாக முடிவெடுப்பீர்கள். கடன்களை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். பண வரவை அதிகரிப்பீர்கள்.

விருச்சிகம்

சாதுர்யமாக காய் நகர்த்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். வாக்கு திறனால் வெளி இடங்களில் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்து மனைவியின் பாராட்டைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு திறனில் முன்னேற்றம் காண்பீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.

தனுசு

சொல்வாக்கு தவறினால் செல்வாக்கை இழப்பீர்கள். சிறியோர்களால் அவமானப்படும் நிலைக்கு ஆளாவீர்கள். போட்டி பந்தயங்களில் அதிகமாக ஈடுபடாதீர்கள். வேலையில் கவனத்தை சிதற விடாதீர்கள். பொறாமைக்காரர்களால் வியாபாரத்தில் இடையூறை சந்திப்பீர்கள். தொழில்துறையில் ஏற்பட்ட மந்த நிலையால் பணவரவில் தடங்கலை காண்பீர்கள்.

மகரம்

தொட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். வியாபாரிகள் விறுவிறுப்பாக விற்பனை செய்வீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை முன்னேற்றகரமாக நடத்துவீர்கள். குழந்தை பேறுக்காக மருத்துவ ஆலோசனை பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.

கும்பம்

நில விற்பனையில் உச்ச நிலையை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் வெற்றி வாகை சூடுவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். வீடு கட்டுவதில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பீர்கள். ஓயாத உழைப்பால் வியாபாரத்தை உயர்த்துவீர்கள். மழலை செல்வத்தின் அழுகுரலால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். சிறப்பான ஊதியம் பெறுவீர்கள்.

மீனம்

மூட்டு வலிக்காக தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். கடல் கடந்து பயணம் மேற்கொள்வீர்கள். விட்டுப் போன உறவுகளை கிட்ட சேர்ப்பீர்கள். நண்பர்களின் உதவியால் சுப காரியங்கள் செய்வீர்கள். அரசு ஊழியர்கள் அதிக நன்மை அடைவீர்கள். பணியாளர்கள் துணிவாக செயல்படுவீர்கள். காதலியின் அனுசரணையால் களிப்படைவீர்கள்.

Related posts

இன்றைய ராசிபலன்கள் – 27/12/2023, கன்னி ரசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்

sumi

இன்றைய நாளுக்கான ராசி பலன்

User1

இன்றைய ராசிபலன்கள் – 02.11.2023

sumi

Leave a Comment