நாட்டில் வன்முறையை தூண்டும் யூடியூப் சேனலுக்கு எதிராக இராணுவ உளவுத்துறை பணிப்பாளரினால் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து யூடியூப் சேனல்மூலம் உளவுத்துறை பொறிமுறையையும் தேசிய பாதுகாப்பையும் பாதிக்கும் வகையில் செய்திகளை உருவாக்கி, அந்த யூடியூப் சேனல் மூலம் ஒளிபரப்பை மேற்கொள்கின்றனர்.
இந்த சேனல்களில், நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும், உளவுத்துறை அதிகாரிகளின் பெயர்களை வெளிப்படுத்தியும் அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பற்றதாக்கியும், இலங்கை பொலிஸாரை அரசியலிலிருந்து விடுவிப்பதற்கான சர்வதேச அமைப்பு IODPP Police என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தும் அஜித் தர்மபாலவுக்கு எதிராக இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் நேற்று (11) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.