28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் அவர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கும் இடையில் சந்திப்பு 

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று (09/09/2024) சந்தித்து கலந்துரையாடினர். ஆளுநரின்  யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என கௌரவ ஆளுநர் இதன்போது கூறினார்.

அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஆளுநர் அவர்கள், மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெளிவுப்படுத்தினார்.

Related posts

அம்பாறையில் வேலையற்ற பட்டதாரிகள் கறுப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம்!!

User1

வாகரையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 வயது சிறுவன் பலி

User1

குளவி கொட்டுக்கு இலக்காகி மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

User1

Leave a Comment