28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

யாழில் இடம்பெற்ற ரணிலின் தேர்தல் பரப்புரை கூட்டம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக களமிறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பரப்புரை கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பரப்புரை கூட்டமானது இன்று(07.09.2024) பிற்பகல் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்றுள்ளது.

இந்த பரப்புரை கூட்டமானது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் இடம் .

2002ஆம் ஆண்டு நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததையடுத்து அத்தியாவசியப் பொருட்களுக்கு பெருந் தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. 

எரிபொருள், எரிவாயு என்பனவற்றை கொள்வனவு செய்ய வரிசைகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து முடக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, நாட்டின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் நாடு ஸ்தம்பித்தது.

இதனால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்தனர். இத்தகைய கஷ்டங்களிலிருந்தும் வரிசை யுகத்திலிருந்தும் மக்களை மீட்டெடுத்தவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே ஆவார்.

கடந்த கால துன்பங்களை, துயரங்களை மறந்து தற்போது சில தரப்பினர் செயற்படுகின்றனர். 

தனி ஒருவராக துணிந்து நின்று நாட்டை பொறுப்பேற்று மக்களின் கஷ்டங்களை போக்குவதற்கு நடவடிக்கை எடுத்தவர் எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார்.

நாட்டில் மீண்டும் வரிசை யுகம் ஏற்படக் கூடாது. பொருளாதார நெருக்கடியில் நாடு சிக்கி விடக் கூடாது என்று கருதினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சகலரும் ஆதரிக்க வேண்டும்.

Related posts

யாழில் 106 பேருக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு.!

sumi

டெங்குப் பெருக்கம் – காரணமானோருக்கு எதிராக வழக்கு.!!

sumi

தற்போது வெற்றிடமாகவுள்ள பாடசாலை காவலாளிகள் பதவிக்கு விரைவில் ஆட்சேர்ப்பு !

User1

Leave a Comment