28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

அமெரிக்காவின் விசேட விமானம் இலங்கையில் தரையிறக்கம்

இலங்கை விமானப்படைக்கு (SLAF) அமெரிக்காவினால் (US) நன்கொடையாக வழங்கப்பட்ட பீச்கிராஃப்ட் கிங் – 360ER விமானம் அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்காளித் திறனைக் கட்டியெழுப்பும் திட்டத்தினால் இந்த விமானத்திற்கு நிதியளிக்கப்பட்டுள்ளது. 

2019ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானம் இலங்கை விமானப்படையுடனான நீண்டகால ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் ஆகியவற்ரற எதிர்த்துப் போராடுவதில் இலங்கையின் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்த விசேட விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை, குறித்த விமானம் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகியவற்றின் பாதுகாப்பினை வலுப்படுத்துவதுடன் நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை கணிசமாக மேம்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய, இந்த விமானம், அடுத்த வாரம் இலங்கையில் தரையிறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எரிபொருள்கள் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

sumi

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் : நால்வர் குற்றவாளிகளாக அடையாளம்

User1

கிளிநொச்சியில் கோரவிபத்து; வழியனுப்பி திரும்பிய பெண் பலி! 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் – 9 எருமை மாடுகள் உயிரிழப்பு

sumi

Leave a Comment