தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக வீடு வீடாக செல்வதை உடனடியாக தடை செய்யுமாறு பொலிஸாருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தரவிட்டது.
இவ்வாறான தேர்தல் பிரசாரம் செய்யப்படுவதை தடை செய்ய பொலிஸார் நடமாடும் ரோந்து பணியை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, குறிப்பிட்ட சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சென்று வருகின்றமை தொடர்பாக தமக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தது. இவ்வாறான செயல்கள் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கு இடையூறாக இருப்பதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டது.
சட்டவிரோதமான முறையில் நடத்தப்படும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பாக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸாருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பணித்துள்ளது.