• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மீண்டும் தவணையிடப்பட்டது முல்லைத்தீவு தியோகு நகர் வழக்கு

admin by admin
September 5, 2024
in இலங்கை செய்திகள்., முல்லைதீவு செய்திகள்
0
மீண்டும் தவணையிடப்பட்டது முல்லைத்தீவு தியோகு நகர் வழக்கு
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு தியோகு நகரில் அவலோன் நிறுவனத்தின் அடாவடியை எதிர்த்து பொதுமக்கள் போராடியமை தொடர்பான வழக்கு வியாழக்கிழமை (05) நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவு – தியோகு நகர்ப் பகுதியில் கடந்த 26.05.2024 அன்று கரைதுறைப்பற்று பிரதேச சபைக்குரிய மக்கள் பயன்பாட்டிலுள்ள வீதியை அவலோன் எனப்படும் தனியார் நிறுவனம் அடாவடியாக வேலியிட்டு தடுத்தமையால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், அடாவடியாக வீதியை தடுத்து அமைக்கப்பட்ட வேலியையும் அப்புறப்படுத்தியிருந்தனர். 

இந்நிலையில், இது தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள வழக்கு 20.06.2024 அன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த விவகாரங்களுடன் தொடர்புடைய முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன், பீற்றர் இளஞ்செழியன், தியோகு நகர் கிராமமக்கள், அவலோன் நிறுவன முகாமையாளர் உள்ளிட்டவர்களை சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு மேலதிக விசாரணைக்காக 05.09.2024 என திகதியிடப்பட்டிருந்தது.

அதனையடுத்து, இன்றைய தினம் இந்த வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தரணிகள் வாதாடி 12.12.2024 என்கிற திகதிக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டுக்கு முற்பட்டே தியோகு நகர் கிராமம் உருவாக்கப்பட்டு 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கே வசித்து வருகின்றன. இவர்களின் வாழ்வாதாரம் கடற்றொழிலாகும். இக்கிராமம் உருவாக்கப்பட்டது தொடக்கம் கடலுக்கு செல்லும் பாதை அக்கிராமத்தினூடாகவே அமைக்கப்பட்டு பயன்பாட்டிலுள்ளது. 

திடீரென தனியார் நிறுவனம் இது தங்களுடைய காணி என உரிமை கோரி மக்கள் அப்பாதையூடாக கடற்கரைக்கு செல்லாதவாறு பாதையை மறித்ததன் பின்னரே மக்கள் போராடி வீதித்தடையை அகற்றியிருந்தார்கள்.

அதனையடுத்து, இந்த கிராமத்துடன் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் விரைந்து, அது பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என கடிதம் வழங்கியிருந்தார்கள். ஆனால், தனியார் நிறுவனத்தினர் மக்கள் மீதும் இந்த கிராம காணி தமக்கானது என கூறியும் முறைப்பாடு செய்ததோடு வழக்கொன்றும் பதிவுசெய்திருந்தனர். 

இந்த வழக்கு முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக சேவகர் பீற்றர் இளஞ்செழியன், கிராம மக்கள் உட்பட 13 நபர்களுக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து – சுமார் 200 குடும்பங்கள் பாதிப்பு!

by selvan
June 24, 2026
0

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில்  ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

by selvan
June 24, 2026
0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

சாதாரண தரப் பரீட்சை சான்றிதழ்களை இணைய வழியில் மட்டுமே பெறலாம்!

by selvan
June 24, 2026
0

2025 (2026) ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான சான்றிதழ்கள் இணையவழி முறைமையின் ஊடாக மட்டுமே வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக பரீட்சைகள்...

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

நடைமுறையில் “க்ளீன் ஶ்ரீலங்கா” திட்டம் –  தலைநகரில் துர்நாற்றம்!

by selvan
June 24, 2026
0

"அரசாங்கம் 'க்ளீன் ஸ்ரீலங்கா' என்று நாடெங்கும் விளம்பரம் செய்கிறது. ஆனால், தலைநகர் கொழும்பில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்குப் பயங்கரமான துர்நாற்றம் வீசுகிறது" என நாடாளுமன்ற...

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி...

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரை பதவி நீக்கக் செய்தமை வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம்!

by selvan
June 24, 2026
0

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஜி. கிஷோரை பதவியில் இருந்து நீக்கியிருப்பது வெளிப்படையான அதிகார துஷ்பிரயோகம் என்றும், அது ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட கடுமையான தாக்குதல்...

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

வவுனியா மாநகர சபையின் முதல்வர்  வடக்கு மாகாண ஆளுநரால் பதவி நீக்கம்!

by selvan
June 24, 2026
0

வவுனியா மாநகர சபையின் மேயர் சு.காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் ஞா.கிசோர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி