2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டகளுக்கு கஃபே அமைப்பின் ஊடாக வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சி திட்டமொன்றை இன்றைய தினத்திலிருந்து கஃபே அமைப்பு நடைமுறைபடுத்தப்பட உள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரான மனாஸ் மக்கின் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி,மன்னார், அநுராதபுரம், பொலனறுவை மற்றும் திருகோணமலை ஆகிய 6 மாவட்டகளில் இருந்து ஒரு மாவட்டத்துக்கு இருவர் வீதம் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் பயிற்சிவிக்கப்பட்டதன் பின்னர் அவர்களது மாவட்டகளுக்கு சென்று வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சி திட்டங்களை அவர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்றையதினம்(02.09.2024) அவர்களுக்கான பயிற்சிவிப்பு பட்டறை வவுனியா நெல்லிஸ்டார் உணவு விடுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நேற்றைய தினம் (02.09.2024), மற்றும் இன்றைய தினம் (03.09.2024) இப்பயிற்சி பட்டறை வவுனியாவில் நடைபெறவுள்ளது.
இன்றைய பயிற்சி பட்டறையில் கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கின் மற்றும், இவ்வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தின் இணைப்பாளர் பிரேமபந்து ஜயதிலக மற்றும், சட்டதரணி ஜகத் லியனாராச்சி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அதேநேரம் பயிற்சிகளுக்கான பயிற்சிவிப்பு சட்டதரணி ஜகத் லியனாராச்சி அவர்கள் மூலமாக வழங்கப்பட்டது.
இந்த பயிற்சிவிப்பின் மூலம் தேர்தலுக்கு முன்னரான காலபகுதி, தேர்தல் தினம் மற்றும் தேர்தலுக்கு பின்னரான காலபகுதியினில் தேர்தல் கண்காணிப்பாளர்களின் கடமைகள் அதேபோன்று வாக்களிக்கின்ற முறைமைகள், வாக்களிப்பில் இளைஞர்களின் ஆர்வத்தை அதிகரிப்பது எவ்வாறு. அதுமாத்திரமில்லாமல் விவசாயபிரதேசங்கள் மற்றும் கடற்தொழில்பிரதேசங்களில் இருக்ககூடிய வாக்காளர்களின் வாக்களிப்பு வீதத்தை எவ்வாறு அதிகரித்தல், என பல விடயங்கள் தொடர்பான பயிற்சிவிப்புக்கள் வழங்கப்படவுள்ளன.
இன்றைய தினம் பயிற்சி பெறுகின்ற பயிற்சியாளர்கள் எதிர்வருகின்ற 05ம் திகதியிலிருந்து அவர்களது மாவட்டங்களுக்கு சென்று, நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு முன் அம்மாவட்டங்களில் குறைந்தது 10 வாக்காளர் அறிவூட்டல் நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்தபடவுள்ளதாக கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளரான மனாஸ் மக்கின் மேலும் தெரிவித்துள்ளார்.