27.9 C
Jaffna
September 16, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் : ஜனாதிபதி ரணில் !

இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.

காத்தான்குடியில் சனிக்கிழமை (31) இரவு இடம்டபெற்ற ஜனாதிபதித் தேர்டதலுக்கான ஆதரவு தேடும் கூட்டத்தில் அவர் பெருந்திரளான முஸ்லிம்கள் மத்தியில் உரையாற்றினார்.

அங்கு காத்தான்குடியில் பிரதேச முஸ்லிம்களாலும் அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் எம்.எம்.என். முபீன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களாலும் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

அங்கு தொடர்ந்து சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,

இந்த நாட்டில் முஸ்லிம்களின் பல பிரச்சிiனைகளை நான் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றேன். நவாஸ் ஆணைக்ககுழுவின் அறிக்iயை நடைமுறைப்படுத்துவேன். அது மாத்திரமல்ல கொவிட் காலத்தில் முஸ்லிம்களது ஜனாஸாக்களை நல்லடக்கம் செவய்ய இடமளிக்கப் படவில்லை. ஜனாஸாக்கள் முஸ்லிம்களது விருப்பத்திற்கு மாறாக எரிக்கப்பட்டன. அந்த விடயத்தில் நான் கரிசனை கொண்டுள்ளேன். இப்பொழுது அமைச்சர் அலிஸப்ரியின் தலைமையிலே ஒரு சட்டத் திருத்தத்தை நாங்கள் மேற்கொள்ள விருக்கின்றோம். அந்த சட்டத் திருத்ததின்படி எந்தவொரு மதத்தினரது உடலையும் அவர்களது உறவுகள் விரும்பினால் அடக்கம் செய்யலாம், எரிக்கலாம் அல்லது தான தர்மம் செய்யலாம் என்பது அந்த சட்டத் திருத்தத்தில் உள்ளங்கும்.

கொவிட் காலத்தில் பலாத்காரமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு நாங்கள் நஷ்ட ஈடு தருவோம்.

இந்த விடயத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவை நாங்கள் நியமித்து அந்த அறிக்கையைப் பாராளுமன்றத்திலே சமர்ப்பித்து தகுந்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்போம். இனவாத மதவாதப் பிரச்சினை நமக்குத் தேவையில்லை.” என்றார்.

ஜனாதிபதியின் பிரச்சார அணியில் கூடவே, அமைச்சர் அலிஸப்ரி, அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்ஹாக் றஹ்மான், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஸர்ரப் ஆகியோரும் இன்னும் பல முக்கிய அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.

Related posts

ஜனாதிபதித்தேர்தல் கண்காணிப்புப் பணிகள்: நாட்டுக்கு வருகை தரவுள்ள சிஷேல்ஸ் முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான குழு

User1

மட்டக்களப்பு கிரான் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

User1

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்களை சந்தித்த ஜனாதிபதி.!

sumi

Leave a Comment