நல்லூர் கந்தசுவாமி (Nallur Kandaswamy Devasthanam) ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சப்பரத் திருவிழா நடைபெற்றுள்ளது.
குறித்த சப்பரத் திருவிழாவானது இன்று(31) நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா கடந்த 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
அந்தவகையில், நல்லூர் கந்தனின் மகோற்சவத்தின் 23ஆம் திருவிழாவான இன்றையதினம் மாலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து பாரம்பரிய பறை முழங்க முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தேர்த்திருவிழா நாளை (1) ஞாயிற்றுக்கிழமையும் நாளைமறுதினம் (2) திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.