வெல்லவாய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கொன்வெல்ல வனப்பகுதியில் நேற்று (28) பிற்பகல் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு முழுவதும் குறித்த வனப்பகுதியில் தீ வேகமாகப் பரவியுள்ளதால் பத்து ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
கடும் வறட்சி மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக இந்த தீ பரவல் ஏற்பட்டிருக்கலாம் அல்லது யாரேனும் தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ADVERTISEMENT
இன்று (29) காலை குறித்த வனப்பகுதியில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.