28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஇலங்கை செய்திகள்

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு !

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர், தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பட்டாசு உற்பத்தி அதிகரிப்பதற்கு தேர்தல் காலங்களே காரணமென்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலையடுத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும்

சில தேர்தல்கள் நடைபெறலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு பொதுவாக ஆகஸ்ட் மாதம் பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்படும்.

எனினும், தேர்தல்களை முன்னிட்டு இம்மடுறை முன்கூட்டியே பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். கம்பஹா, காலி, கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வறிய குடும்பம் ஒன்றுக்கு இராணுவத்தின் நிதியிலிருந்து வீடு வழங்கி வைப்பு

User1

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பாக இடம் பெற்ற ஆன்மீக அருளுரை

User1

அதிகரித்து வரும் வெப்பநிலையினால் தோல் நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் : வைத்திய நிபுணர்கள் !

User1

Leave a Comment