வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி கலாசாரப் பேரவையும், சாவகச்சேரி பிரதேச சபையும் இணைந்து பண்பாட்டுப் பெருவிழா ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு யாழ். வரணி கலாசாரசார மண்டபத்தில் நேற்று(21.08.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கலைஞர்களுக்கு “இளங்கலைஞர் விருது” மற்றும் “கலைச்சாகரம் விருது” வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளதுடன், நிகழ்வை பல்வேறு கலை நிகழ்வுகள் அலங்கரித்துள்ளன.
தென்மராட்சி பிரதேச செயலர் உஷா சுபலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், விருந்தினர்களாக, வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் லாகினி நிருபராஷ், யாழ்.மாவட்ட உள்ளூராட்சி பிரதி ஆணையாளர் பொ.ஸ்ரீவர்ணன், சாவகச்சேரி பிரதேச சபைச் செயலாளர் க.சந்திரகுமார், மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் சுகுணலினி விஜயரத்தினம், கலாபூசணம் கந்தையா சந்திரகேது ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.