27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில் ; இந்நாட்டின் ஜனாதிபதி

வீழ்ச்சியிலிருந்த நாட்டை மீட்சிபெற செய்த செயல் வீரர் ரணில். அந்தவகையில் மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்  என உறுதியான நம்பிக்கை தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அதுவே நாட்டின் தற்கால சூழலுக்கு சரியானதெரிவாக இருக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிடு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அனுராதபுரத்தில் ஹரிச்சந்திரா மைதானத்தில் ஆதரவுக் கட்சிகளின் பங்களிப்புடன் மத தலைவர்களின் ஆசியுடன் பல ஆயிரம் மக்களின் ஒன்றுதிரள்வுடன் இன்று (17.08.2024) நடைபெற்றது.

இதன்போது வடக்கு கிழக்கு மக்களின் ஆயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் கலந்து தனது ஆதரவை உறுதிசெய்து உரையாற்றுகையுலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும்

குறிப்பாக ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பளிப்பதானது  மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.  இவரது வெற்றியே கடந்த காலங்களிலிருந்து விடுபட்டு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்க மக்களுக்கும் நாட்டுக்கும் வாய்ப்பளிக்கும் ஒன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.

இதே நேரம் கடந்த இரண்டு வருடதுக்குள் ஜனாதிபதி ரணில் தன்னுடைய ஆற்றலால் தன்னுடைய செயல்பாட்டால் நாட்டுக்கு நல்லதொரு சூழ்நிலையை உருவாக்கி தந்திருக்கின்றர்.

அதனால் அவருக்கு நாங்கள் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்க வேண்டும் என்று விருப்புகின்றேன்.

அந்த வகையில் எதிர்வரும் செப்ரொம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு சேர்ந்து பயணிப்பதற்கு ஊடாகவும்  எமது  நாடும் மக்களும்  எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து முழுமையாக வெளியில் வரலாம் என்று நினைக்கின்றேன் என்றும்அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

யாழில் மாயமான இளைஞன்! தேடும் உறவினர்கள்.

sumi

தொலைபேசி உரையாடல் பதிவேற்றம் – கைதானவருக்கு விளக்கமறியல்.!

sumi

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ,போராட்டத்திற்கு தடையுத்தரவு

User1

Leave a Comment