எம்பொக்ஸ் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.
குறித்த நோய் தாக்கம் அதிகரித்துள்ளதோடு உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார அவசரகால நிலையாக பிரகடனப்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவுறுத்தலையும் விடுத்துள்ளது.
நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2023 ஐ விட அதிகமாக உள்ளதுடன் மேலும் 10 நாட்களில் ஆறு புதிய நாடுகளில் வைரஸ் பரவியுள்ளது என்று ஆபிரிக்க CDC இன் இயக்குநர் ஜெனரல் ஜீன் கசேயா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில். எம்பொக்ஸ் என்ற குரங்கு காய்ச்சலானது ஆபிரிக்க கண்டத்தின் 13 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தற்போது, அந்த நாடுகளிலிருந்து 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குறித்த காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 517 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.