வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீனாவுடன் (China) பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ராசபுத்திரன் இராசமாணிக்கம் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ சென்ஹோங் (Qi Zhenhong) ஆகியோருக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
தற்போதைய விவகாரங்கள் மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களின் கரிசனைகள் தொடர்பில் மிகவும் சுமுகமான பயனுள்ள கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக, 2022 டிசம்பரில் சாணக்கியன், சீனா மகிந்த ராஜபக்சவின் நண்பன் என்றும் இலங்கையின் நண்பன் அல்ல என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
எனவே ‘சீனா வீட்டுக்குச் செல்;’ என்ற பிரசாரத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.