யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற தன்னை வைத்தியசாலை பணிப்பாளர், சட்ட மருத்துவ அதிகாரி, வைத்தியசாலை பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் முறையிட்டார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பிலான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பட்டவரான தம்பி ஐயா கிருஷ்ணானந்த் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோது இதனை தெரிவித்தார்.
ADVERTISEMENT
அத்துடன் ஜனாதிபதி செயலகம், சுகாதார திணைக்களம், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளும் குறித்த விடயம் தொடர்பில் பதிவுத் தபாலில் மகஜரை கையளித்ததாக தெரிவித்தார்.