28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorizedஉலக செய்திகள்

பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசாவில் போர் நிறுத்தம்: ஜோ பைடன் உறுதி

காசாவில் (Gaza) தொடரும் போரை விரைவில் நிறுத்த முடியுமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகிய பின்னர் ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “ போர் நிறுத்தம் தொடர்பாக, நான் ஒன்றிணைத்த திட்டமானது, G7 நாடுகள், ஐ.நாவின் (UN) பாதுகாப்பு சபை மற்றும் பலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பிராந்தியப் போராக மாறாமல் இருக்க நானும் எனது குழுவும் இணைந்து அயராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இலகுவாக இது ஒரு பிராந்தியப் போராக மாறக்கூடும்” என எச்சரித்துள்ளார்.

மேலும், தமது பதவிக்காலம் முடிவடைவதற்குள் காசா போரை நிறுத்த முடியுமென தாம் நம்புவதாக ஜோ பைடன் கூறியுள்ளார்.

எனினும், போர் நிறுத்தம் தொடர்பாக அடுத்த வாரம் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்க அமெரிக்கா (USA), கத்தார் (Qatar) மற்றும் எகிப்து (Egypt) உள்ளிட்ட மத்தியஸ்தர்கள் சமீபத்தில் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ( Minister Bezalel) நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடற்கரையில் ஏற்பாடு செய்திருந்த பிறந்தநாள் விழாவின் போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலி

User1

ராஜபக்ஷர்களே நாட்டு மக்களை யாசகர்களாக்கினர் : நாமல் ராஜபக்ஷவை படுதோல்வியடைய செய்து மக்கள் தமது வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் : பாட்டலி சம்பிக்க ரணவக்க !

User1

இலங்கைக்கு மேலாக ஏற்பட்டுள்ள வளிமண்டலவியல் மாற்றம் – நாடு முழுவதிலும் பல பாகங்களிலும் மழை தொடரும் – சில பிரதேசங்களில் 100 mm வரை மழை

User1

Leave a Comment