ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்ய உள்ளதாக ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
நேற்று கண்டியில் வர்த்த சங்க உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
கண்டி நகரை சுற்றாலாத்துறை மத்திய நிலையமாக மாற்ற வேண்டும்.சுற்றுலாப்பயணிகள் ஒரு இரவு தங்கி பயனில்லை அவர்களை 2 , 3 இரவுகள் அவர்களை தங்க வைக்க முயற்சிக்க வேண்டும்.
கண்டி நகரை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதன் முதல் கட்டமாக பழைய போகம்பர சிறைச்சாலையில் ஹில்டன் ஹோட்டல் வரவுள்ளது.தபால் தலைமையகத்தில் தாஜ் ஹோட்டல் வரவுள்ளது.அதேபேல் சி டி பி டிப்போ இருக்கும் இடத்தில் மற்றுமொரு பிராண்ட் ஹோட்டலை கொண்டுவர உள்ளோம்.
அவர்களை ஒரு இடத்தில் ஒரு நாளாவது தங்கவைக்க வேண்டும். இது சுற்றுலாப்பயணிகளிடன் பிட்பொகட் அடிக்கும் வேலை நாம் அவர்களின் பணத்தை எமது நாட்இல் செலவிட வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.