28.4 C
Jaffna
September 19, 2024
இலங்கை செய்திகள்மட்டக்களப்பு செய்திகள்

வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முதலிடம் பெற்றமைக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

(படங்கள் இணைப்பு)

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் சுகவனிதையர் சிகிச்சை சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் அதி உயர் தரக்கணிப்பில் புத்தாக்கம் படைப்பாற்றல் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய பிரிவுகளில் சிறப்பான சேவையினை வாழைச்சேனை பிரதேச பெண்களுக்கு வழங்கியமைக்காக தேசிய ரீதியில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் முதலிடம் பெற்றமைக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

சுகவனிதையர் சிகிச்சை சேவைகள் தொடர்பான தேசிய ரீதியிலான செயல்திறன் மதிப்பீட்டில் தேசிய ரீதியில் உள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் மத்தியில் அதி உயர் தரக்கணிப்பின் மூலம் புத்தாக்கம், படைப்பாற்றல் மற்றும் தொடர் கண்காணிப்பு ஆகிய பிரிவுகளில் மிகச் சிறப்பான சேவையினை அனைத்து தேசிய ரீதியான சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களை விட சிறப்பாக வழங்கியமைக்காக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு தேசிய ரீதியில் முதலிடம் வழங்கப்பட்டது.

சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு மருத்துவ பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி பாலித மஹிபால, அமைச்சின் பிரதிநிதி சுசில் பெரேரா, ஐக்கிய நாடுகள் பிரதிநிதி, மற்றும் குடும்ப சுகாதார பணியகத்தின் தலைவர் சித்ரமாலி டீ சில்வா ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இவ்விலக்கை அடைய குடும்ப சுகாதார பணியகம் , பிராந்திய சுகாதார பணிப்பாளர் மற்றும் பிராந்திய தாய் சேய் சுக நல பிரிவினரின் வழிகாட்டல் உறுதுணையாக இருந்து குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் குறித்த சேவையில் படிப்படியாக கடந்த ஜந்து வருட காலம் முன்னேற்றமடைந்தே இந்த இலக்கை எட்டி தேசிய ரீதியில் முதல் இடத்தை பிடித்தது, இதற்காக சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தேவராஜமுதலி ஸ்டீவ் சஞ்ஜுவ் தமைமையில் அவரது வழிகாட்டலில் தாதிய உத்தியோகத்தர், மேற்பார்வை மருத்துவ மாது , பொதுசுகாதார மாதுகள் ஆகியோரின் வினைத்திறனான அயரான சேவையினாலும், வாழைச்சேனை அன்னையர் குழுக்களின் பூரண ஒத்துழைப்பினாலும் இவ்விருது கிடைக்கப் பெற்றுள்ளது.

அத்துடன் தொடர்ந்தும் மக்களுக்கு உயர்தர சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருவதோடு மக்களும் குறித்த சேவையை ஆர்வத்துடன் பெற்றுக் கொள்ளுமாறும் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தேவராஜமுதலி ஸ்டீவ் சஞ்ஜுவ் கேட்டுக் கொள்கின்றார்.

Related posts

ரணிலின் இரத்தினபுரி பொதுக்கூட்டத்தில்

User1

கிளிநொச்சியில் கோரவிபத்து; வழியனுப்பி திரும்பிய பெண் பலி! 2 சிறுவர்கள் உட்பட 8 பேர் காயம் – 9 எருமை மாடுகள் உயிரிழப்பு

sumi

350 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

User1

Leave a Comment