27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மாபெரும் குருதிக்கொடை முகாம்.

(படங்கள் இணைப்பு)

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில்  ஏற்பட்டுள்ள குருதித் தட்டுப்பாட்டை   நிவர்த்தி செய்யும் நோக்கத்தோடு மன்னார் ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் அமரர் சங்கர்  அவர்களின் நினைவாகவும்  மன்னார் பொது வைத்தியசாலை இரத்த வங்கி முகாமையாளர்  அமரசேகர அவர்களின் மேற்பார்வையில் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ( 9)  இடம் பெற்றது.

காலை 8 மணி தொடக்கம் 1 மணி வரை குறித்த மாபெரும் குருதிக்கொடை முகாம்’ நடைபெற்றது

மன்னார் ரோட்டரி கழகத்தில் தலைவர் திருமலைராசா தனேஸ்   தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  இளைஞர்கள் யுவதிகள் மற்றும்  தொடர்ச்சியாக குருதி வழங்கும் கொடையாளர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள்  குதியினை வழங்கியிருந்தார்கள்.

இதன்போது குருதிக் கொடையாளர்களுக்கு குருதிக் கொடை கான பதிவுப் புத்தகம்  , அத்தாட்சிப் பத்திரம் மற்றும் நினைவுச் சின்னம் போன்ற வை வழங்கி  வைக்கப்பட்டது.

மேலும்  இந்நிகழ்விற்கு  மன்னார் வைத்தியசாலை  வைத்தியர்கள் ,தாதியர்கள் ,மன்னார் அஞ்சல் அலுவலகம் ,  இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் கிளையினர் , முதியோர் நலன் சார்ந்து செயல்படும் டெவ்லிங் நிறுவனத்தினர் ,மன்னார் ரோட்டரி கழகத்தின் உறுப்பினர்கள் பங்களிப்புடன்  மிகவும் சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related posts

உலக கனிஷ்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தின் அரை இறுதிக்கு முன்னேறினார் அக்கலன்க

User1

புதிய மீன்பிடி சட்டத்தை எதிர்க்க தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு

sumi

தங்காலையில் ஒருவர் வெட்டிப்படுகொலை

sumi

Leave a Comment