28.4 C
Jaffna
September 19, 2024
Uncategorized

பரந்த மோதலின் அபாயம்: எதிர்பாராத தாக்குதலை மேற்கொள்ள காத்திருக்கும் ஈரான்

காசா யுத்தம் தீவிரமடையும் என்ற அச்சத்தின் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அவசர நிலையைத் தணிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் அழைப்பு விடுத்துள்ளார்.

“மத்திய கிழக்கில் ஒரு பரந்த மோதலின் அபாயம் குறித்து ஆழ்ந்த கவலையடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

மிகவும் ஆபத்தான சூழ்நிலையாக மாறியுள்ளதைத் நிலையை தணிக்க அனைத்து தரப்பினரும், யுத்தம் மூண்டுள்ள அந்த மாநிலங்களுடன் சேர்ந்து, அவசரமாக செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தெஹ்ரான் மற்றும் பெய்ரூட்டில் மூத்த ஹமாஸ் மற்றும் ஹிஸ்பொல்லா பிரமுகர்களை படுகொலை செய்ததற்கு ஈரான் மற்றும் லெபனான் குழுவான ஹிஸ்பொல்லாவிடம் இருந்து பதிலடி கொடுக்க இஸ்ரேல் தயாராகி வருகிறமை அச்சத்தை அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில்,  எவ்வேளையிலும் ஈரானும் ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

ஜி7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் வெளிநாட்டு அமைச்சர்களிடம் பிளிங்கென் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த 24 முதல் 48 மணித்தியாலங்களிற்குள் ,மத்திய கிழக்கு நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை தாக்குதல் இடம்பெறலாம் எனவும் பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஈரானும் ஹெஸ்புல்லா அமைப்பும் பதில் தாக்குதலை மேற்கொள்ளக்கூடும் என பிளிங்கென் வலியுறுத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  

Related posts

புகையிரத விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்

User1

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள் வெளியானது

sumi

தெதுரு ஓயாவில் மூழ்கிக் காணாமல் போன தாய் , மகனின் சடலங்கள் மீட்பு

User1

Leave a Comment