உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நுவரெலியாவில் இருந்து கதிர்காமம் நோக்கிய புனித யாத்திரை இன்று ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
41 பார்வைகள்

மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலயத்தில் இருந்து கதிர்காமம் நோக்கி செல்லும் பாதை யாத்திரை இன்று 04 ம் திகதி திரு.செல்வம் தலைமையில் மறே, நல்லதண்ணி சாமி மலை, மஸ்கெலியா பகுதிகளில் இருந்து சுமார் 50 க்கு மேற்பட்ட யாத்திரிகர்கள் கொண்ட குழு இன்று மாலை 3.30 மணிக்கு கதிர்காம பாதயாத்திரை ஆரம்பித்தனர்.

இவர்கள் இன்று  கொட்டும் மழையிலும் நடை பயணமாக நோர்வூட் டிக்கோயா நகரை அடைந்து அங்கு உள்ள அம்மன் ஆலயத்தில் தங்கி நாளை காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிக்க உள்ளதாகவும் நாளை காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து ரதல்ல வரை செல்கின்றனர்.

ரதல்ல ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலையில் மீண்டும் யாத்திரை ஆரம்பித்து பொரகஸ் ஆலயம் வரை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து வெளிமடை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்குவர்.

மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து டயரபா வரை சென்று அங்கு உள்ள ஆலயத்தில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் கும்பல் வளை வரை சென்று அங்கு உள்ள காளி கோயில்களில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிப்பார்கள்.

பின்னர் வெள்ளவாய வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை எத்தில் வெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பிப்பர்.

பின்னர் குடாவெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை மீண்டும் யாத்திரை ஆரம்பித்து லுனுகம் வெகர வரை சென்று அங்கு உள்ள பௌத்த விகாரையில் தங்கி இருந்து மறுநாள் காலை கதிர்காமம் சென்றடைவார்கள் என யாத்திரை குழு தலைவர் திரு.செல்வகுமார் தொரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்ட வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வு.!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 8 உள்ளக பயிற்சி மருத்துவ அதிகாரிகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (28) வைத்தியசாலைக்கு வருகை தந்த நிலையில், குறித்த…

41 0 0
இலங்கை செய்திகள்

மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களுக்கு பொற்கிழி வழங்கி கௌரவிப்பு.!

இலங்கையின் நாடக மற்றும் திரைப்படத் துறையில் பல தசாப்தங்களாகத் தடம் பதித்து வரும் மூத்த நடிகை லீலா ரஞ்சனி அவர்களின் நீண்டகால கலைச் சேவையினைப் பாராட்டி, நடிகரும்…

44 0 0
இலங்கை செய்திகள்

முதலீடுகளை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை சரி செய்ய வேண்டும்.!

முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் தமது முதலீடுகளை இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒருவழி முதலீட்டு நுழைவாயில் (One-Stop Investment Portal) எதிர்பார்த்த பயனை முழுமையாக வழங்கும் வகையில்…

35 0 0
இலங்கை செய்திகள்

விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் நிகழ்வு.!

ஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு…

43 0 0