உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இளம் வயதினரிடையே பாலியல் நோய்கள் அதிகரிப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

இளம் வயதினரிடையே பாலியல் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், தற்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே இந்த நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, HIV மற்றும் STI எனப்படும் பாலியல் தொடர்பான தொற்று நோய்கள் தொடர்பில், குறிப்பாக இளம் வயதினர் இடையே குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிப்பு காணப்படுகிறது.

சுகாதார அமைச்சின் பிரிவு மேற்கொண்ட கலந்துரையாடல்களில் சில பாடசாலை மாணவர்களும் பல்கலைக்கழக மாணவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், தொடர்புடைய அனைத்து தரப்புகளையும் இணைத்து இந்த நிலையைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சிலர் அறியாமையால் குறித்த தொற்றுக்களால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் திரைகளுக்கு அதிகமாக அடிமையாகுவது சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்காலத்தில் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு இட்டுச் செல்லக்கூடிய அபாயம் இருப்பதாக மனநல மருத்துவர் சமிந்த வீரசூரியவர்தன தெரிவித்துள்ளார்.

டிஜிட்டல் திரை அடிமையால் மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் காரணமாக, குழந்தைகள் மற்றும் இளம் தலைமுறை போதைப்பொருள் பயன்பாட்டை நோக்கி செல்லக்கூடும் என்றும் மருத்துவர் எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0