உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் – 12 பேர் பலி!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
72 பார்வைகள்

உக்ரைனின் பல்வேறு பிராந்தியங்களைக் குறிவைத்து ரஷ்யா மேற்கொண்ட வான்வழி தாக்குதல்களில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இது பொதுமக்களை இலக்காகக் கொண்ட “பயங்கரமான தாக்குதல்” என அவர் விபரித்துள்ளார்.

ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களில் உக்ரைனின் பல்வேறு உள்கட்டமைப்புகள், குடியிருப்புகள் மற்றும் பொதுச் சொத்துகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டினிப்ரோ பெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் உயிரிழந்ததுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை, தெற்கு நகரமான ஜபோரிஜியாவில் ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், வடக்கு சுமி பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 69 வயதுடைய பெண் ஒருவரும், 77 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யா மேற்கொண்ட இந்த திடீர் தாக்குதல்களால் உக்ரைனின் குறைந்தது 6 பிராந்தியங்களில் உயிரிழப்புகளும் பாரிய சேதங்களும் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

79 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

77 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

90 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

27 0 0