வெனிசுலாவில் கடந்த புதன்கிழமை இரவு ஏற்பட்ட 2 கடுமையான நில அதிர்வுகளுக்குப் பிறகு, தற்போது வரை 500க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ஜியான்லூகா ராம்போலா டெல் டிண்டாரோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஏழு மாநிலங்கள் நில அதிர்வினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் தலைநகர் கரகாஸ் மற்றும் லா குவைரா ஆகிய பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை சுமார் 2,500 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகளுக்கான முக்கியமான 72 மணிநேர காலம் கடந்திருந்தாலும், மீட்புக் குழுவினர் தொடர்ந்து உயிர்பிழைத்தவர்களை மீட்டு வருகின்றனர்.
இது குறித்து கருத்துரைத்துள்ள டிண்டாரோ, “நில அதிர்வு ஏற்பட்டு நான்கு நாட்கள் கடந்த நிலையிலும், முக்கியமான 72 மணிநேர அவகாசம் முடிந்த பின்னரும், நேற்று மட்டும் சர்வதேச மீட்புக் குழுவினர் ஏழு பேரை உயிருடன் மீட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.










