உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி பிரித்தானியாவில் போராட்டம்!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
99 பார்வைகள்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் நீதியை வலியுறுத்தி  இன்று அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

“தமிழீழ சுயநிர்ணய அமைப்பு” , “சர்வதேச நீதிக்கான தமிழீழ மக்கள் சங்கம்” மற்றும் பல தமிழ் தேசிய அமைப்புகள் இணைந்து இன்று மதியம் 1.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இப்போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தது.

போராட்டத்தில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான தமிழர்கள், தமிழீழத் தேசியக் கொடிகளையும், கோரிக்கை பதாகைகளையும் ஏந்தியவாறு, “நீதியும் சுயநிர்ணயமும் தமிழீழத்திற்கே!” என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து தங்களது கண்டனங்களையும் கோரிக்கைகளையும் பதிவு செய்தனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழீழப் பகுதிகளில் சர்வதேச அமைப்புகளின் கண்காணிப்புடன் கூடிய பொது வாக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும், இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் இணையப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை உடனடியாக நீக்க வேண்டும், தமிழர்களின் பேச்சுரிமை, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், நினைவேந்தல் உரிமை மற்றும் கலாச்சார உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும், ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் தொடர்ச்சியான அரசியல் ஒடுக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறலும், சுயநிர்ணய உரிமையுடன் கூடிய நீதியும் கிடைக்கப் பெற வேண்டும் போன்று ஐந்து பிரதான கோரிக்கைகள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்பட்டன.

“எங்கள் நிலம், எங்கள் மக்கள், எங்கள் உரிமை” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இளையோர் முதல் முதியோர் வரை பெருந்திரளான மக்கள் இதில் பங்கேற்றனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடூரங்களை விளக்கும் துண்டுப் பிரசுரங்களும், பிரித்தானிய அரசாங்கம் ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் இப்போராட்ட களத்தில் வலியுறுத்தப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0