• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

செம்மணிப் புதைகுழி விசாரணைக்கு
சர்வதேச நிபுணத்துவம் மிக அவசியம்

selvan by selvan
June 20, 2026
in இலங்கை செய்திகள்.
0
செம்மணிப் புதைகுழி விசாரணைக்குசர்வதேச நிபுணத்துவம் மிக அவசியம்
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், உண்மைகளைக் கண்டறிவதற்கும் சர்வதேச தடயவியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் அவசியம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் எம்.பி., நோர்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

அவரது ஐரோப்பிய பயணத்தின் ஒரு பகுதியாக, நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் அமைந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் ஆப்கானிஸ்தான் பிரிவின் துணை இயக்குநர் பியேட் கப்ரியல்சன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்

இலங்கையின் சமீபத்திய அரசியல் நிலவரங்கள், மனித உரிமை முன்னேற்றங்கள் மற்றும் தமிழ்ச் சமூகத்தைப் பாதிக்கும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய கூட்டுப் புதைகுழியாகக் கருதப்படும் செம்மணியில், இதுவரை 380 இற்கும்  மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன என்று சாணக்கியன் எம்.பி., அதிகாரிகளுக்கு விளக்கினார். எனினும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்றும் அவர் கவலை வெளியிட்டார்.

இவ்வளவு பெரிய அளவிலான அடையாளப் பணிகளை முழுமையாக முன்னெடுப்பதற்கு இலங்கையிடம் தற்போது போதிய தடயவியல் மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச தரத்துக்கு ஏற்ப, நம்பகமான விசாரணையை உறுதி செய்ய அரசு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும், ஆனால் அதற்கான எந்தவொரு தெளிவான அறிகுறியும் தற்போதைய அரசிடம் தென்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 1998 ஆம் ஆண்டு செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் இன்னமும் ஸ்கொட்லாந்தில் பாதுகாப்பாக உள்ளதை நினைவூட்டிய அவர், இலங்கை அரசு விரும்பினால் உடனடியாக சர்வதேச ஒத்துழைப்புடன் டி.என்.ஏ. பரிசோதனைகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குப் பதிலளிக்க இதுவே சரியான வழி என்றும் வலியுறுத்தினார்.

நோர்வே அரசின் இராஜாங்கச் செயலாளர் ஆண்ட்ரியாஸ் மோட்ஸ்ஃபெல்ட் கிராவிக்குடனான முந்தைய சந்திப்புகளின் தொடர்ச்சியாக அமைந்த இந்தக் கலந்துரையாடலில், பின்வரும் முக்கிய அம்சங்கள் குறித்து பேசப்பட்டன.

* மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் நிலவும் தொடர்ச்சியான தாமதம் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வின் அவசியம்.

* பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் தொடர்ச்சியான பயன்பாடு, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், காணி உரிமைகள் மற்றும் கட்டாயக் காணாமற்போகச் செய்யப்பட்டவர்கள் விவகாரம்.

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பரில் கொழும்பில் நோர்வேத் தூதுவருடன் கலந்துரையாடப்பட்டு, வடக்கு மற்றும் கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து, சம்பந்தப்பட்ட இலங்கை அமைச்சு இதுவரை எந்தவித உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்காமை குறித்து இதன்போது அதிருப்தியும் வெளியிடப்பட்டது.

இந்த ஒஸ்லோ சந்திப்புடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஐரோப்பிய பயணம் நிறைவுக்கு வந்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது அவர் ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே வெளிவிவகார அமைச்சு மற்றும் பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்துள்ளார்.

குறிப்பாக, ‘டெமோ பின்லாந்து’ (Demo Finland), ‘டெமோக்ரசி இன்டர்நேஷனல்’ போன்ற பல்கட்சி ஜனநாயக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அரசியல் கட்சி அபிவிருத்தி, ஜனநாயக பங்கேற்பு, இளைஞர் ஈடுபாடு மற்றும் நிறுவனத் திறன் மேம்பாடு போன்ற துறைகளில் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் அவர் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

இந்தப் பயணமானது சர்வதேச சமூகத்துக்கும் தமிழ் மக்களுக்குமான உறவை வலுப்படுத்துவதோடு, தமிழர் தாயகத்தின் தற்போதைய சவால்களை உலக அரங்குக்குக் கொண்டு செல்ல ஏதுவாக அமைந்தது என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன்யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சர் கலந்துரையாடல்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடன்
யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சர் கலந்துரையாடல்!

by selvan
June 20, 2026
0

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நானாயக்காரவுக்கும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்குமிடையிலான விசேட கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று...

இலங்கையில் சீன ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும்!

இலங்கையில் சீன ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதியை விசாரிக்க வேண்டும்!

by selvan
June 20, 2026
0

இறுதி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு கொழும்பு மற்றும் காலியில் அமைந்திருந்த இரு களஞ்சியங்கள் ஊடாக சீன ஆயுதங்களை வழங்கியமை தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல்...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில்  566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை: வடக்கு மாகாணத்தில்  566 மாணவர்கள் 9 ‘ஏ’ சித்தி

by selvan
June 20, 2026
0

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் (2025) பரீட்சைப் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்திலிருந்து இப்பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 70.1...

போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின்  33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு-சாய்ந்தமருது பகுதியில்  சம்பவம்

போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின்  33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு-சாய்ந்தமருது பகுதியில்  சம்பவம்

by selvan
June 20, 2026
0

வீதி பொது போக்குவரத்து சட்டங்களை  மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக   சாய்ந்தமருது  பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது...

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை

by selvan
June 20, 2026
0

மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் படகு ஓடுபாதையினை ஆழப்படுத்தித் தருமாறு மன்னார் - மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வேட்டையாமுறிப்பு, கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

by selvan
June 20, 2026
0

வாகனங்களைச் செலுத்தும்போது ஆசனப்பட்டி அணியும் சட்டம் இன்று (20) முதல் அமுல்படுத்தப்படுவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.இதற்கமைய, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களிலுள்ள அனைத்துப்...

சோமரத்ன ராஜபக்சவை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து மனித புதைகுழிகளை இனங்காண வேண்டும்!

சோமரத்ன ராஜபக்சவை யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து மனித புதைகுழிகளை இனங்காண வேண்டும்!

by selvan
June 20, 2026
0

கிருஷாந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருக்கும் சோமரத்ன ராஜபக்சவை, யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வந்து எந்ததெந்த பகுதிகளில் மனித புதைகுழிகள் இருக்கின்றது என்பதை கண்டறிய...

உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது – பிரதமர் தெரிவிப்பு!

உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது – பிரதமர் தெரிவிப்பு!

by selvan
June 20, 2026
0

உலக சந்தையில் விலை குறைந்தாலும் உடனடியாக எரிபொருள் விலையைக் குறைக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்குக்...

“தோல்விகளால் சோர்வடைய வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் பொருத்தமான துறை உலகில் நிச்சயம் உண்டு”

“தோல்விகளால் சோர்வடைய வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் பொருத்தமான துறை உலகில் நிச்சயம் உண்டு”

by selvan
June 20, 2026
0

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள சூழலில், மாணவர்களின் மனநிலை மற்றும் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என சிறுவர்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி பெற்றுக்கொண்ட சிறந்த பெறுபேறுகள்!

by selvan
June 20, 2026
0

வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி மாணவர்கள்  சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்டனர். அவை வருமாறு,காசிநாதன் பின்ஹலன் 9ஏதவசீலன் தனுஷ்கா 9ஏசிறீதரன்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி