உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

படகு ஓடுபாதையை ஆழப்படுத்துமாறு கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் ரவிகரன் எம்.பியிடம்கோரிக்கை

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
22 பார்வைகள்

மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் படகு ஓடுபாதையினை ஆழப்படுத்தித் தருமாறு மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட வேட்டையாமுறிப்பு, கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினர் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

கீலிக்கரையான்பிட்டி மீனவர்சங்கத்தினரின் கோரிக்கைக்கு அமைவாக, கீலிக்கரையான்பிட்டி களப்பு பகுதிக்கு நேரடியாகச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார். இதன்போதே மீனவர் சங்கத்தினரால் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த கீலிக்கரையான்பிட்டி களப்புப் பகுதியில் 09கிராமங்களைச்சேர்ந்த 60வரையான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தும் 02கிலேமீற்றர் தூரமான படகு ஓடுபாதை சீரின்றிக் காணப்டுவதால் தாம் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக கீலிக்கரையான்பிட்டி மீனவர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவ்வாறு குறித்த படகு ஓடுபாதை சீரின்றிக் காணப்டுவதால் மீனவர்கள் நடந்து செல்லவேண்டிய நிலை ஏற்படுவதுடன், படகுகளை தள்ளிச் செல்லவேண்டிய நிலையும் காணப்படுவதாக மீனவர்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினருக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறு படகுகளைத் தள்ளிச் செல்லும்போதும், நடந்து செல்லும்போதும் மீனவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

இத்தகைய சூழலில் குறித்த படகு ஓடுபாதையை ஆழப்படுத்தித்தருமாறு பலதடவைகள் தம்மால் பல்வேறு தரப்புக்களிடமும் கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் இதுவரை குறித்த படகு ஓடுபாதையை ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரியப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் கீலிக்கரையான்பிட்டி மீனவர்களின் குறைபாடுகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், குறித்த 02கிலோமீற்றர் வரையிலான படகு ஓடுபாதையை ஆழப்படுத்துவதுதொடர்பில் தம்மால் கவனஞ் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களில் 55.7 சதவீதமானோர் பன்முக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.!

ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பன்முக அச்சுறுத்தல் சுட்டெண் அறிக்கையின் தரவுகளுக்கமைய, இலங்கையின் மொத்த மக்கள் தொகையில் 55.7 சதவீதமானோர் கல்வி, சுகாதாரம், கடன் சுமை மற்றும்…

23 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பு சிறை மோதல் – தலைமை சிறை அதிகாரி உட்பட 20 பேருக்கு அறிவித்தல்!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடந்த மோதலில் முப்பத்திரண்டு பேர் உயிரிழந்தமை தொடர்பாக, சந்தேக நபர்களை அடையாளம் காணும் அணிவகுப்பில் ஆஜராகுமாறு இருபது பேருக்கு அறிவிப்புகள் அனுப்புமாறு நீர்கொழும்பு பிரதம…

84 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

67 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

92 0 0