உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
26 பார்வைகள்

மாத்தறை மாவட்டம், அத்துரலிய பிரதேசத்தில் இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன், 70 வயது முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று புதன்கிழமை இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில், உந்துருளி ஒன்றைச் செலுத்திச் சென்ற அத்துரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, மற்றைய உந்துருளியைச் செலுத்திச் வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரு மோட்டார் சைக்கிள்களும் அதிக வேகத்துடன் நேருக்கு நேர் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

2 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

50 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

43 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக இதுவரை நான்கு இடையீட்டு மனுக்கள் தாக்கல்.!

அரசமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இதுவரையின் நான்கு இடையீட்டு மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள அரசமைப்பின் 22 ஆவது…

61 0 0