உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தன்மீது பிழை இல்லை என்றால் கோட்டா ஏன் நீதிமன்றுக்கு ஓட வேண்டும்?

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
22 பார்வைகள்

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசின் தலையீடுகள் எதுவுமே இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நஜீத் இந்திக்க தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளைப் புதிய அரசு முன்னெடுக்கவில்லை. மாறாக, புலனாய்வு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட விசாரணை நிறுவனங்களுமே அதனை முழுமையாகச் சுயாதீனமாக மேற்கொண்டு வருகின்றன.

கடந்த காலங்களைப் போலன்றி, தற்போதைய அரசு இந்த நிறுவனங்களை வலுப்படுத்தி, அவற்றின் மீதான அரசியல் அழுத்தங்களை முற்றாக நீக்கியுள்ளது.

விசாரணைகளை நியாயமான முறையில் முன்னெடுப்பதற்கான பின்னணியை மட்டுமே அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், அதன் சாதகமான பலன்கள் தற்போது விசாரணைகளின் மூலம் வெளிவரத் தொடங்கியுள்ளன.

விசாரணைகளின் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் எனக்குத் தனிப்பட்ட ரீதியில் எதுவும் தெரியாது.

எனினும், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள நீதிமன்ற நடவடிக்கை கடுமையான விமர்சனத்துக்குரியது.

தன்னைக் கைது செய்ய வேண்டாம் எனக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளமையானது, எனக்கோ அல்லது அரசுக்கோ மட்டுமல்ல, நாட்டின் சாதாரண பொதுமக்களுக்கும் அவர் மீது ஒரு பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது.

குண்டுத் தாக்குதலுடன் எவ்வித தொடர்பும் இல்லாத ஒரு நபர், ‘என்னைத் தடுத்துக் கைது செய்ய வேண்டாம்’ என்று அவசர அவசரமாக நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

அப்படியென்றால், இந்தச் சம்பவங்களுடன் அவருக்கு ஏதோவொரு தொடர்பு இருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

‘திருடன் பிடிபடுவதற்கு முன்னர் அவசரமாகத் தப்பியோட முயல்வதைப் போன்ற’ கிராமத்துப் பழமொழிக்கு அமைவான ஓர் உதாரணமாகவே முன்னாள் ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

கடந்த காலங்களில் இவ்வாறான நபர்கள் கைது செய்யப்படப் போகின்றார்கள் என்பது குறித்து அவர்களின் அரசியல் சகாக்கள் முன்னரே ஊடகங்களில் கூறிவந்ததை நாம் அறிவோம்.

எமக்குத் தெரியாவிட்டாலும், இச்சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்குத் தங்களுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.

நாட்டில் சட்டத்தையும் நீதியையும் முறையாக நிலைநாட்டுவதற்காகவே மக்கள் இந்த அரசை ஆட்சிக்குக் கொண்டுவந்துள்ளனர்.

எனவே, விசாரணை நிறுவனங்களைத் தொடர்ந்து பலப்படுத்தி, அரசியல் தலையீடற்ற பின்னணியை உருவாக்குவோம். அதிகாரிகள் எவ்வித அச்சமுமின்றித் தங்களின் கடமைகளை ஆற்றுவதற்கான முழுமையான ஆதரவையும் பலத்தையும் எமது அரசு தொடர்ந்து வழங்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

52 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

45 0 0