உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

அம்பகமுவ பிரதேச சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
28 பார்வைகள்

அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந தலைமையில் இன்று 17 ஆம் திகதி காலை 10 மணிக்கு கினிகத்தேன நகரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தேசிய டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந் நடவடிக்கையின் போது கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார், பொது சுகாதார அதிகாரிகள், சுகாதார உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் சுற்றுச்சூழல் அதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

கினிகத்தேன நகரில் உள்ள பொது பேருந்து நிலையம், பாடசாலை, வணக்கஸ்தலங்கள், பொது இடங்கள், வர்த்தக நிறுவனங்கள் என்பன சோதனை இடப்பட்டு டெங்கு நுளம்புகள் பரவாமல் தடுக்க முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.

அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறான சேவைகள் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

அத்துடன் இது குறித்து அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந கருத்து தெரிவிக்கையில், அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பொதுமக்கள் பொலித்தீன் பாவனையை முற்றாக தடை செய்ய வேண்டும். நமக்கு பின்னர் நமது சந்ததியினருக்கு சுத்தமான பிரதேசத்தை உருவாக்குவது எமது தலையாய கடமை.

அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டவளை, கினிகத்தேன, நோட்டன், கலுகலை, லக்சபான, பொல்பிட்டிய, ஹங்கராம்பிட்டி, கிரிவன்னெலிய போன்ற பகுதிகளை உள்ளடக்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இப் பகுதியில் அமைந்துள்ள அனைத்து நகர கிராமங்களிலும் உக்கா பொருட்கள் குவிந்து வருகிறது. அதன் காரணமாக இனிவரும் காலங்களில் எந்த ஒரு உக்கா பொருட்களையும் கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் அவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டு பாவனைக்கு உதவாத நிலையில் உள்ள அனைத்து பொருட்களையும் பிரதேச சபையின் வாகனங்களில் ஒப்படைக்க வேண்டும் என அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளர் கப்பில நாகந்ந கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

61 0 0
இலங்கை செய்திகள்

பாலை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர் கைது.!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இருந்து பாலை மரக்குற்றிகளை சூட்சுமமான முறையில் நெல் உமிக்குள் மறைத்து யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு தயார் நிலையில் நிறுத்தி…

96 0 0
இலங்கை செய்திகள்

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு.!

பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திருத்தம் இன்று (29) முதல் அமுலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

53 0 0
இலங்கை செய்திகள்

சீனப் பிரஜை கொ*லை; இருவர் கைது.!

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் சீனப் பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மேலும் இரு சீனப் பிரஜைகள் சீகிரிய பகுதியில்…

46 0 0