உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகனுக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
38 பார்வைகள்

நோர்வேயின் பட்டத்து இளவரசியின் மகன், இரண்டு பாலியல் பலாத்காரக் குற்றங்களில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மரியஸ் போர்க் ஹோய்பி தான் (Marius ‌Borg Hoiby) குற்றமற்றவர் என வாதிட்டார்.

29 வயதான இவர், நோர்வேயின் பட்டத்து இளவரசி மெட்டே-மாரிட், பட்டத்து இளவரசர் ஹாக்கனைத் திருமணம் செய்வதற்கு முன்பு, அவருக்கு இருந்த முந்தைய உறவின் மூலம் பிறந்த மகன் ஆவார்.

அவர் மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளில் இரண்டில் அவர் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, மற்ற இரண்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

2018 மற்றும் 2024-க்கு இடையில், உறங்கிக்கொண்டிருந்த அல்லது வேறுவிதமாக சுயநினைவு இன்றி இருந்த நான்கு பெண்களைப் பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்ததாக ஹோய்பி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்போது போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் தடையுத்தரவை மீறியது உள்ளிட்ட சிறிய குற்றங்களுக்காகவும் அவர் மீது பிற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ஹோய்பி பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டுகளை மறுத்தபோதிலும், பல சிறிய குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

87 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

85 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

93 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

30 0 0