உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

லக்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப அடிக்கல் நாட்டல்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
26 பார்வைகள்

பகுதியளவில் தீப்பரவல் ஏற்பட்ட லக்க்ஷபான தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப தோட்ட நிர்வாகத்தால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஆர்.பி.கே தோட்ட கம்பெனிக்கு உரித்தான மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள லக்க்ஷபான தோட்ட வாழமலை பிரிவில் அமைந்துள்ள நவீன முறையில் 1969 ஆம் ஆண்டு காலப் பகுதியில் அமைக்கப்பட்ட தேயிலை தொழிற்சாலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பகுதியளவில் பாரிய தீ பரவலுக்கு உள்ளானது.

இதன் காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலை எரிந்து சாம்பலானது.

குறித்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப தோட்ட நிர்வாகம் முன்வந்துள்ளது.

தீப்பரவல் காரணமாக தோட்ட நிர்வாகத்திற்கு காப்புறுதி நிறுவனம் வழங்கிய காப்புறுதி பணத்துடன் தோட்ட நிர்வாகம் இணைந்து தேயிலை தொழிற்சாலையை மீண்டும் கட்டியெழுப்ப நேற்று 14ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த நிகழ்வில் தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர் தோட்டத்தில் பணியாற்றி வரும் உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சமய பெரியவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டும் வைபவத்தில் கிரியைகளை மேற்கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது.!

கொஸ்வத்தை – பொத்துவட்டவன பகுதியில் இருந்து பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதியில் நேற்று…

78 1 0
இலங்கை செய்திகள்

தொடர்ச்சியாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி வரும் அரசு.!

சில மாதங்களுக்கு முன்பு, நமது நாட்டின் அரச துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் 150,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் 14,008 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்பில்…

53 0 0
இலங்கை செய்திகள்

மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொ*லை செய்த கணவன்.!

அநுராதபுரம், கொரகஹவெவ பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, அதே ஆயுதத்தால் தன்னையும் குத்திக்கொண்டு உயிரை மாய்க்க…

36 0 0
இலங்கை செய்திகள்

கண்டி தலதா பெரஹராவை கண்டுகளித்தார் ஜனாதிபதி.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் இறுதி மகா ரந்தோலி பெரஹரா நேற்று முன்தினம் இரவு வீதி உலா வந்த…

46 0 0