உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

நெடுந்தீவுக் கடலில் மூழ்கிய மீனவர்! – தேடுதல் தீவிரம்

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
28 பார்வைகள்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலிருந்து நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு கடற்றொழிலுக்காகச் சென்ற மீனவர் ஒருவர் கடல் கொந்தளிப்புக் காரணமாகக் காணாமற்போயுள்ள நிலையில், அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

நெடுந்தீவு – தாளைத்துறைப் பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு இரண்டு மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இதன்போது, கடலில் ஏற்பட்ட கடுமையான நீரோட்டம் மற்றும் கொந்தளிப்புக் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த படகிலிருந்து இரண்டு மீனவர்களும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு காணாமற் போயுள்ளனர்.

காணாமற்போன மீனவர்களை மீட்கும் பொருட்டு சக மீனவர்களினால் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன் விளைவாக, விபத்துக்குள்ளான மீனவர்களில் ஒருவர் நேற்று பகல் வேளையில் படகுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

எனினும், கடலில் மூழ்கிய மற்றைய மீனவர் விடியும்வரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், கடற்படையினரின் உதவியுடன் அப்பகுதி மீனவர்கள் இணைந்து அவரைத் தேடும் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

67 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

56 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0