உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றது இந்த பயங்கரவாத சட்டமே!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
22 பார்வைகள்

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றதும் இந்த பயங்கரவாத சட்டமே என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவிதுள்ளர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்பு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

அண்மையில் கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகர் சங்கீத்சன் பயங்கரவாத சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

குறித்த சட்டம் மாற்றப்பட்டு சாதாரண சட்டம் மூலம் பிணையில் விடுதலையாகியுள்ளார்.

இதற்கு நாட்டின் தலைமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

சங்கீத்சனை சிறையில் சென்று பார்வையிட்டு ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜிதஹேரத்தை சந்தித்து குறித்த விடயம் தொடர்பாக பேசியிருந்தேன்.

கடந்த புதன்கிழமை ஜனாதிபதியுடன் தொலைபேசியில் பேசியிருந்தேன் அதன்போது சாதாரண பிணையில் அவரை எடுக்க முடியும் என தெரிவித்திருந்தார்.

கடற்றொழில் அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் உள்ளிட்டோரிடமும் பேசியிருந்தேன்.

மக்களின் குரலுக்கு செவிசாய்த்து இந்த அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. அனைவரின் முயற்சியுமே விடுதலைக்கு காரணம் குறிப்பாக சட்டத்தரணிகள்.

60000 மக்கள் விடுதலை முன்னணியினரை கொன்றதும்.பல இலட்சம் எமது மக்களை கொன்றதும் இந்த பயங்கரவாத சட்டமே.

எனவே மாற்று சட்டம் இன்றி இதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக அரசு முன்னெடுத்துள்ள விசாரணை தொடர்பாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.

ஒரு இனத்தை அல்லது மதத்தை எப்படி கொல்லலாம் என திட்டமிட்ட செயற்பாட்டை அனுமதிக்க முடியாது. முஸ்லீம் மக்களை வைத்து தமிழ் மக்கள் தான் அதிகம் கொல்லப்பட்டுள்ளனர்.

சுரேஸ் சாலே போன்ற குற்றவாளிகளை கைது செய்து எவற்றிற்கும் அச்சப்படாது நீதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

67 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

56 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0