உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் சிக்கியது பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினரின் வாகனம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
40 பார்வைகள்

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் பிலிப்பையா அலெஸ்ரன் அவர்களுக்கு சொந்தமான வாகனம் தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுடன் கடற்படையினரிடம் சிக்கியுள்ளது.

அதில் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு வலைகளும் வாகனமும் வெற்றிலை கேணி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன் அதில் பயணித்த உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

குறித்த பருத்திதுறை பிரதேச சபை உறுப்பினர் நீண்டகாலமாக சுருக்கு வலை தொழிலாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டு அதற்கு எதிராகவும் நடந்து கொள்வது போன்று குரலெழுப்பி வந்த நிலையில் இன்று அதிகாலை வசமாக மாட்டியுள்ளார்.

அண்மைக்காலமாக சட்ட விரோத சுருக்கு வலை தொழில் வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் கடர்ப்படையினர் நேற்றும் இன்றும் கரை ஓரமாக தேடுதல் நடத்தி வந்தனர்.

குறித்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் என்பது குறிப்பிட தக்கது

இதேவேளை கைப்பற்ற பட்ட வாகனம், சுருக்குவலை, கைது செய்யப்பட்ட நபர் ஆகியோர் உரிய சட்ட நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

67 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

62 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

57 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

49 0 0