உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் வெளிவரும் வரை பிள்ளையான் மற்றும் சலேயை விடுதலை செய்யக்கூடாது!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
38 பார்வைகள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும் என்றும், அதுவரை இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் விடுவிக்கப்படக் கூடாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில்,

“உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் மறைந்துள்ள உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிக்கொண்டுவருவதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

எனவே, இந்தத் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான் மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை எக்காரணம் கொண்டும் விடுவிக்கக் கூடாது.

அவர்களிடம் முறையான விசாரணைகள் தொடரப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

24 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

46 0 0
இலங்கை செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வுகளில் தமிழரசுக் கட்சி கலந்துகொள்ளாது.!

இலங்கையில் இம்முறை நடைபெறும் சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான தின நிகழ்வுகளில் இலங்கைக் தமிழரசுக் கட்சி கலந்துகொள்வதில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக் தமிழரசுக்…

72 0 0
இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

65 0 0