• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 14, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தமிழ் மக்கள் கொ*ல்லப்பட்டதைக் கூற பேராயர் கர்தினாலுக்கு தயக்கம் ஏன்?

Mathavi by Mathavi
June 12, 2026
in இலங்கை செய்திகள்.
0
தமிழ் மக்கள் கொ*ல்லப்பட்டதைக் கூற பேராயர் கர்தினாலுக்கு தயக்கம் ஏன்?
Share on FacebookShare on Twitter

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக நீதி கோரி இன்று வரை குரல் கொடுக்கும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையும், கத்தோலிக்க சபையினரும், இந்த நாட்டில் தமிழ் மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டனர் என்று கூறுவதற்குத் தயக்கம் காட்டுவது ஏன் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ”வலுசக்தி மற்றும் வாழ்க்கைச் செலவுப் பாதுகாப்புத் திட்டம்” தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
“கடந்த மே 27ஆம் திகதி பருத்தித்துறைமுனைப் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற தந்தை, மகன் உட்பட நான்கு மீனவர்கள் காணாமல்போயுள்ளனர். அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான முறையான நடவடிக்கைகளை அரசு உரிய நேரத்தில் முன்னெடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மீனவர் சமூகம் குற்றம் சாட்டுகின்றது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசிடமிருந்து இதுவரை முறையான பதில் இல்லை. எனவே, அவர்களின் குடும்பத்தினருக்குப் பதில் அளிக்கும் வகையில் உண்மை என்ன என்பது கண்டறியப்பட வேண்டும்.

அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் கடந்த மே 18 அன்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இனவழிப்பு நடந்தது என்றும், அதற்காக நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக அவர் கூறிய இந்தக் கருத்துக்குச் சில கிறிஸ்தவ அமைப்புகளே கண்டனம் தெரிவித்திருந்தன.

மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தமிழ் மக்களுக்கு நடந்தது இனவழிப்பு என்பதை வெளிப்படையாகக் கூறியிருந்தார். ஆனால், தற்போதைய கத்தோலிக்க சபை அதற்கான நீதியைக் கோருவதற்குத் தயாராக இல்லை. அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் முன்வைத்த கருத்தை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம்.

யாழ். மாவட்டத்தில் 1990ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட மயிலிட்டி மக்கள், 35 வருடங்கள் கடந்தும் இன்னும் தங்களின் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தமது நிலங்களை விடுவிக்கக் கோரி அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மயிலிட்டியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மக்களின் சொந்தக் காணிகளில் இராணுவத்தினர் குடியேறவும் இல்லை; ஆனால் அங்கு விவசாயத் தோட்டம் செய்கின்றனர். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் சலூன்கள், முன்பள்ளிகள் மற்றும் விவசாயத் தோட்டங்களை நடத்தி, காய்கறிகளைச் சந்தையில் விற்கின்றனரே தவிர, மக்களின் காணிகளை விடுவிக்க மறுக்கின்றனர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிரிகேடியர் பால்ராஜ் குறித்துப் பேசினார் என்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், சொந்த மண்ணில் குடியேற முடியாமல் 35 வருடங்களுக்கும் மேலாக மக்கள் உறவினர் வீடுகளில் வாழும் அவல நிலை குறித்து எவரும் பேசுவதில்லை. எனவே, மாறி மாறி வரும் அரசுகள் பொய்களைக் கூறாமல், மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.” – என்றார்.

Related Posts

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

சுரேஷ் சலேவுக்கு மரண தண்டனை விதித்தாலும் எதிரொலிக்க மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவின் விவகாரத்தில் தற்போதைய அரசு முற்றிலும் நீதியான முறையில் சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்...

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

பதவிகளைக் காப்பாற்ற இரகசிய தேசிய மாநாடா? – ரெலோவின் தலைமைக்கு எதிராக போர்க்கொடி.!

by Mathavi
June 14, 2026
0

ரெலோ (தமிழீழ விடுதலை இயக்கம்) அமைப்பின் தலைமைக்கு எதிராகப் பல மூத்த போராளிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் நிலையில், கட்சியின் தேசிய...

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து சடலம் மீட்பு.!

by Mathavi
June 14, 2026
0

மாவத்தகம, பரகஹதெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது...

புதையல் தோண்டிய மூவர் கைது.!

தொலைத்தொடர்பு கோபுர கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் கைது.!

by Mathavi
June 14, 2026
0

ராகம பகுதியில் உள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களில் உள்ள கேபிள்களை திருடிய சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 34 வயதுடைய ரத்துபஸ்வல மற்றும்...

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

கைகளைக் கழுவிக்கொண்டு உத்தமர்களாக வர நாங்கள் விடவே மாட்டோம்.!

by Mathavi
June 14, 2026
0

கடந்த காலங்களில் மனித உயிர்களை அழித்து, தங்களது கைகளை இரத்தத்தால் நனைத்துக் கொண்ட கொலையாளிகளும் ஊழல்வாதிகளும், மீண்டும் தங்களைக் கழுவிக்கொண்டு சமூகத்தின் முன்னால் உத்தமர்களைப் போல் வலம்...

வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உயிரிழப்பு.!

நாய் மீது மோதிய மோட்டார் சைக்கிள்; ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
June 14, 2026
0

அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்துருகிரிய - கொடகம வீதியின் பனாகொட பகுதியில் பாதையைக் கடக்க முயன்ற நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்....

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்.!

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள்.!

by Mathavi
June 14, 2026
0

இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களான 'மோதர நிபுண' என்பவரின் சகோதரர் மற்றும் 'புளூமெண்டல் சங்கா' ஆகிய இரு...

மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு.!

அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.!

by Mathavi
June 14, 2026
0

பமுனுகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ கடற்கரையில் நேற்று (13) மதியம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்தவர் சுமார்...

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.!

சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக ஜனாதிபதிக்கு அவசர கடிதம்.!

by Mathavi
June 14, 2026
0

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கு ஆதரவாகவும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு...

தொடரும் கொடிய சட்டம்; நிரபராதிகளின் ஆயுள் சிறைகளிலேயே முடிகின்றது.!

தொடரும் கொடிய சட்டம்; நிரபராதிகளின் ஆயுள் சிறைகளிலேயே முடிகின்றது.!

by Mathavi
June 14, 2026
0

இலங்கையில் தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், 44 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார்....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி