உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தென்னாபிரிக்காவில் அத்துமீறி வாழும் குடியேற்றவாசிகளை நோக்கி துப்பாக்கிச் சூடு – 12 பேர் உயிரிழப்பு!

உலக செய்திகள் 3 மாதங்கள் முன்
37 பார்வைகள்

தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரின் புறநகர்ப் பகுதியொன்றில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிளீவ்லேண்ட் (Cleveland) பகுதியில் அமைந்துள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகள் வாழும் பகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்றைய தினம் அந்நாட்டு நேரப்படி இரவு 11:10 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.

வெள்ளை நிற சிற்றூர்தி ஒன்றில் வந்த 10 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள், கிளீவ்லேண்ட் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இறங்கியுள்ளதாகபொலிஸார் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்கள் அந்த அத்துமீறிய குடியேற்றப் பகுதியின் இரண்டு பிரதான நுழைவாயில்கள் ஊடாகவும் உள்ளே புகுந்து, பல இடங்களுக்கும் சென்று அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர் அவர்கள் வந்த வாகனத்திலேயே அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலேயே 8 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒரு ஆண் உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மேலும் 9 பேர் சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அந்நாட்டு காவல்துறையினரால் தற்போது பிரம்மாண்ட தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் : ட்ரம்ப் எச்சரிக்கை!

போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரானை முற்றிலுமாக அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று (22) எச்சரித்தார். ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையில்…

90 0 0
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் நிபந்தனை!

அமெரிக்கா தனது இராணுவ நெருக்குவாரங்களைக் குறைத்து, ஈரானிய துறைமுகங்கள் மீதான முற்றுகையை நீக்கினால், அடுத்த ஏழு நாட்களுக்குள் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க முடியும் என ஈரானின்…

88 0 0
உலக செய்திகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு

உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் சந்திக்கவுள்ளதுடன், ரஷ்யாவுடனான தாக்குதல்களை நிறுத்துவதற்கான சமரச முயற்சியை முன்னெடுக்கவுள்ளார்.…

96 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

31 0 0