• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து படையினர் உல்லாசம் – ரவிகரன் எம்.பி விசனம்!

selvan by selvan
June 6, 2026
in இலங்கை செய்திகள்.
0
மயிலிட்டியில் மக்களின் காணிகளில் பங்களா அமைத்து படையினர் உல்லாசம் – ரவிகரன் எம்.பி விசனம்!
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு, மயிலிட்டிப் பகுதியில் இராணுவத்தினர் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து பங்களாக்களை அமைத்து உல்லாசமாக இருக்கும் நிலையில், காணிகளுக்குரிய மக்கள் வீதிகளில் இறங்கி போராடும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது அந்த அந்த மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்பட்டால், அரசிற்கும் கொடுமையான நிலைகளே ஏற்படுமெனவும் எச்சரித்துள்ளார்.

மயிலிட்டி மக்களால் தமது காணி விடுவிப்பை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 1986ஆம் ஆண்டு வலிகாமம் வடக்கு, மயிலிட்டியில் வாழ்ந்த இந்த மக்களை இராணுவத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இவ்வாறு தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து இராணுவத்தினரால் வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி வீதிகளில் இறங்கி போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இலங்கை அரசானது எமது மக்களுக்கு செய்யும் கொடுமையிலும் கொடுமையான செயற்பாடாகவே இதனைக் காண்கின்றோம்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த மக்களை மீள்குடியமர்துவது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

எனவே தற்போதைய ஆட்சியாளர்களாவது தங்களை தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்பதே இந்த மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற ‘ஹிரிகம’ என்னும் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிங்கள மக்கள் மத்தியில் உரையாற்றும்போது ” நிலம் என்பது உங்களுடைய உரிமை, உங்களுடைய சொத்து, அதனை நீங்கள் பேணிப்பாதுகாக்கவேண்டும்” என கருத்துத் தெரிவித்திருந்ததை ஊடகங்களின் ஊடாகப் பார்வையிட்டிருந்தோம்.

ஜனாதிபதி குறிப்பிட்ட அதே விடயத்தைத்தான் நாமும் கோருகின்றோம்.

நிலம் என்பது எமது உரிமை, எமது சொத்து, எங்களுடைய நிலத்தை எமக்குத்தாருங்கள் என்பதைத்தான் எமது மக்களும் நாங்களும் கோருகின்றோம்.

இந்த மக்கள் ஏறத்தாள 3500ஏக்கருக்கும் மேற்பட்ட பூர்வீகக் காணிகளை இழந்துள்ளனர்.

எனவேதான் அந்தமக்கள் வீதி ஓரங்களில் நின்று தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே தற்போதைய ஆட்சியாளர்கள் இந்த மக்களின் பூர்வீக காணிகளை விடுவிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இந்தப் பகுதியில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் ஒரு கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ளது.

எப்போதாவது இங்கு வந்து இராணுவத்தினர் தங்கிவிட்டுச் செல்வதற்காகவே அந்த பங்களா அமைக்கப்பட்டுள்ளதாக எம்மால் அறிய முடிகின்றது.

அந்த கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ள பகுதியில் 200இற்கும் மேற்பட்ட குடும்பங்களின் காணிகள் காணப்படுகின்றன.

இவ்வாறு அந்த காணிகளுக்குரிய குடும்பங்கள் வீதிகளிலிருந்து தொடர்ச்சியாகப் போராடிக்கொண்டிருக்க, அந்த மக்களின் பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்து அவற்றை அலங்கரித்து பங்களா அமைத்து இராணுவத்தினர் சுகபோகம் காண்கின்றனர்.

எனவே தான் நாம் எமது மக்களுக்கு கொடுமை இழைக்கப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டுகின்றோம்.

இதேபோன்ற கொடுமைகள் முல்லைத்தீவில் கேப்பாப்புலவு, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, வட்டுவாகல் உட்பட பல இடங்களில் இடம்பெறுகின்றது.

மன்னாரில் முள்ளிக்குளத்திலும் இதேபோன்ற கொடுமைகள் இடம்பெறுகின்றது.

அந்த மக்களும் தமது காணிகளை விடுவிப்பதற்கு தொடர்போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த நாட்டில் தமிழ் மக்களாக நாம் பிறந்தது குற்றமா? தமிழ் மக்களை இவ்வாறாக வதைக்கவேண்டாம் என்றே நாம் கூறுகின்றோம்.

எமது மக்களுக்கு தொடர்ந்தும் இவ்வாறான கொடுமைகள் இழைக்கப்பட்டால், உங்களுக்கும் கொடுமையான நிலைகள் ஏற்படுமெனத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

Related Posts

சங்குவேலி முதியவர் கொலை:இரு சந்தேகநபர்கள் கைது!

சங்குவேலி முதியவர் கொலை:இரு சந்தேகநபர்கள் கைது!

by selvan
June 6, 2026
0

யாழ். சங்குவேலிப் பகுதியில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து வந்த முதியவர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு, உடமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிஸார்...

காலியில் 3,000 போதை மாத்திரைகளுடன் தனியார் மருந்தக ஊழியர் ஒருவர் கைது!

காலியில் 3,000 போதை மாத்திரைகளுடன் தனியார் மருந்தக ஊழியர் ஒருவர் கைது!

by selvan
June 6, 2026
0

காலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் போதை மாத்திரைகளைப் பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில், தனியார் மருந்தக ஊழியர் ஒருவரைப் பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட...

யாழில் தெருக்கூத்து மூலம் உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு!

யாழில் தெருக்கூத்து மூலம் உலக சுற்றாடல் தின விழிப்புணர்வு!

by selvan
June 6, 2026
0

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்டப் பாடசாலை மாணவர்கள் ஒன்றிணைந்து தெருக்கூத்து நாடகங்கள் மற்றும் விழிப்புணர்வுப் பேரணி ஊடாகப் பொதுமக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பாடசாலை...

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க பொலிஸார் இணக்கம்!

முல்லைத்தீவு பொலிஸார் ஆக்கிரமித்துள்ள தனியார் காணியை விடுவிக்க பொலிஸார் இணக்கம்!

by selvan
June 6, 2026
0

முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக  விடுவிக்கப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து...

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் அடித்து உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன!

யாழ். பல்கலைக்கழகத்தில் வெசாக் கூடுகள் சேதம் – காவலாளிகளிடம் தீவிர விசாரணை!

by selvan
June 6, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெசாக் கூடுகள் இனந்தெரியாத நபர்களால் உடைத்து சேதமாக்கப்பட்டமை தொடர்பில், அங்கு கடமையிலிருந்த மூன்று காவலாளிகளிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த வெசாக் பண்டிகையை...

மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் நினைவு தினம் இன்று!

மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் நினைவு தினம் இன்று!

by selvan
June 6, 2026
0

மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது....

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு

by selvan
June 6, 2026
0

இராம பிரானால் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க ஆலயமான மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கராக தேர்தல் மூலம் தியாகராஜா விக்ரமன் தேர்வு...

தோல்விப் பயத்தாலேயே மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துகின்றது அரசு – சஜித் சாடல்

தோல்விப் பயத்தாலேயே மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்துகின்றது அரசு – சஜித் சாடல்

by selvan
June 6, 2026
0

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளால் அச்சமடைந்துள்ள தற்போதைய அரசு, மாகாண சபைத் தேர்தலை வேண்டுமென்றே தாமதப்படுத்தி வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

மீகொடை விபத்து – இருவர் பொலிசாரிடம் சரண்!

மீகொடை விபத்து – இருவர் பொலிசாரிடம் சரண்!

by selvan
June 6, 2026
0

மீகொடை பகுதியில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்துடன் தொடர்புபட்டு, தேடப்பட்டு வந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கெப்...

பருத்தித்துறையில் காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அமைச்சர் சந்திரசேகர்!

by selvan
June 6, 2026
0

கடந்த சில நாட்களுக்கு முன்பு பருத்தித்துறை முனை மற்றும் கற்கோவளம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி