உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

நீதித்துறைக்கு ஜனாதிபதியிடமிருந்தே அழுத்தம்! – ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தல் என்று பீரிஸ் சாடல்!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நாட்டின் நீதித்துறையின் கௌரவம் மற்றும் சுயாதீனம் தற்போது ஜனாதிபதியினாலேயே பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் பீரிஸ் முக்கிய விடயங்களை முன்வைத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஏப்ரல் 30 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு மே 25 அன்று வழங்கப்படும் என்றும், அந்தத் தீர்ப்பைக் கௌரவத்துடன் வரவேற்கத் தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஒரு வழக்கின் தீர்ப்பு அறிவிக்கப்படும் வரை அது குறித்த விவரங்களை அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி மாத்திரமே அறிவார். அதனை மூன்றாம் தரப்பினருடன் கலந்தாலோசிக்க அவருக்கு அதிகாரம் இல்லை. உயர்நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ள நிலையில், அவரே இவ்வாறு பேசுவது நீதிபதிகளுக்குப் பிரயோகிக்கப்படும் அழுத்தமாகும்.

இந்தச் செயற்பாடானது நீதித்துறையின் சுயாதீனம் குறித்து அரசமைப்பின் 15 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விதிகளையும் மீறும் செயலாகும்.

மேலும், நீதித்துறை விவகாரங்களில் முறையற்ற விதத்தில் தலையிடுவது இலங்கை அரசமைப்பின் 111 (சி) பிரிவின் கீழ் ஓராண்டு சிறைத்தண்டனை மற்றும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிரஜாவுரிமை இழப்பு போன்ற தண்டனைகளுக்குரிய பாரிய குற்றமாகும்.

இந்த விவகாரத்தின் பாரதூரமான தன்மையைக் கருத்திற்கொண்டு, எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சித் தலைவர்கள் ஒன்றிணைந்து பிரதம நீதியரசருக்குப் பதிவுத் தபால் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளோம். இந்தக் கடிதத்தின் பிரதிகள் சர்வதேச தொழில்சார் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் பெரும் சுவராக விளங்கும் நீதித்துறையைப் பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

65 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

36 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0